ஏழாயிரம், பிஎஸ்என்எல் 'சிம்' கார்டுகள் 2 நாட்களில்
விற்பனை: பி.எஸ்.என்.எல்., நிறுவனம் அதிரடி
பொள்ளாச்சி, பி.எஸ்.என்.எல்., அலுவலகத்தில் இரண்டு நாட்களில் ஏழாயிரம், 'சிம்' கார்டுகள் விற்பனையானதால், கார்டுகளுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.தமிழகத்தில், 'ஏர்செல்' நிறுவனம் நஷ்டத்தால் தன் சேவையை நிறுத்திக் கொள்வதாக கடந்த வாரம் அறிவித்தது. தன் வாடிக்கையாளர்களை வேறு நிறுவனத்துக்கு மாற்றிக் கொள்ளுமாறு வேண்டியது. இதையடுத்து நேற்று முன்தினம் மாலை முதல், 'ஏர்செல்' நிறுவன சேவை நிறுத்தப்பட்டது.
இதையடுத்து, அதே, 'சிம்' எண்ணை வேறு நிறுவனத்துக்கு மாற்றிக் கொள்ளும் 'மொபைல் நம்பர் போர்டபிளிட்டி'க்காக பிற நிறுவனங்களுக்கு ஆயிரக்கணக்கானோர் படையெடுத்தனர். பொதுத்துறை நிறுவனமான, பி.எஸ்.என்.எல்., அலுவலகத்தில் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. பி.எஸ்.என்.எல்., நிறுவனத்தில் இருப்பு வைத்திருந்த 'சிம் கார்டுகள்' இரண்டு நாட்களில் விற்றுத்தீர்ந்தன.
பி.எஸ்.என்.எல்., அதிகாரிகள் கூறுகையில், 'திடீரென, 'சிம்' கார்டு விற்பனை அதிகரித்து. 'ஏர்செல்' நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் ஆயிரக்கணக்கில் வருகின்றனர். இரண்டு நாட்களில் மட்டும் ஏழாயிரம், 'சிம்' கார்டுகள் விற்பனையாகியுள்ளன. 'சிம்' கார்டு இருப்பு இல்லாததால் கோவையில் இருந்து, 'சிம்' கார்டுகள் அனுப்பி வைக்கும்படி கேட்டுள்ளோம்,' என்றனர்க
கடலூரில் 24 ,000 ஏர்செல் வாடிக்கையாளர்கள் பிஎஸ்என்எல் க்கு கடந்த இரண்டு வாரங்களில் மாறினர்.
0 comments:
Post a Comment