*திரிபுராவில் 25 ஆண்டுகால மார்க்சிஸ்ட் ஆட்சிக்கு முற்றுபுள்ளி வைக்கிறது பாஜக..! நாகலாந்திலும் ஆட்சியை பிடிக்க வாய்ப்பு*
☀25 ஆண்டுகளாக மார்க்சிஸ்ட் கட்சியின் வசம் இருந்த திரிபுராவில் பா.ஜ.க. ஆட்சியை கைப்பற்றுகிறது. நாகலாந்திலும் ஆட்சியைப் பிடிக்க பா.ஜ.க.வுக்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
☀திரிபுராவில், வாக்கு எண்ணிக்கை துவங்கியது முதலே மார்க்சிஸ்ட் - பா.ஜ.க. கூட்டணி இடையே இழுபறி நிலவியது. இரு கட்சிகளின் வேட்பாளர்களும் மாறி மாறி முன்னிலையில் இருந்தனர். 11 மணிக்குப் பின்னர் நிலவரம் முழுக்க முழுக்க பா.ஜ.கவிற்கு சாதகமானது. திரிபுராவில் பா.ஜ.க.வுக்கு 40க்கும் அதிகமான இடங்கள் கிடைக்க வாய்ப்புள்ளதால், தனிப்பெரும்பான்மையுடன் அக்கட்சி திரிபுராவில் ஆட்சியை பிடிக்கும் சூழல் உள்ளது.
☀நாகலாந்தில் பா.ஜ.க. கூட்டணி 32 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. நாகா மக்கள் கட்சி 24 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. இங்கு காங்கிரஸ் ஒரு இடங்களில் கூட முன்னிலை பெறவில்லை.
☀மேகாலயாவில் ஆளும் காங்கிரஸ் கட்சி 25 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.தேசிய மக்கள் கட்சி 12 இடங்களிலும், பா.ஜ.க. 8 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றன. இதர கட்சிகள் சார்பில் போட்டியிட்ட 14 பேர் இங்கு முன்னிலை பெற்றுள்ளனர். எனவே தொங்கு சட்டசபைக்கு வாய்ப்பு அதிகரித்துள்ளது
*┈┉┅━❀manisat news❀━┅┉┈*
0 comments:
Post a Comment