Hi manisat
#ref-menu

Monday, March 12, 2018

இன்றைய மணிசாட் செய்திகள் 12/03/18 Today Tamil ManisatNews

இன்றைய மணிசாட் செய்திகள்  12/03/18 Today Tamil ManisatNews

தேனி குரங்கணி காட்டுத் தீயில் சிக்கி 9 பேர் உயிரிழப்பு : உயிரிழந்த 9 பேரில் 6 பேர் சென்னையை சேர்ந்தவர்கள், 3 பேர் ஈரோட்டை சேர்ந்தவர்கள் என தேனி மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ் அறிவிப்பு.

தேனி குரங்கணி காட்டுத்தீ குறித்த தகவல்களை பெற, தகவல் மைய எண்கள் வெளியீடு; 94450 00586 99947 93321 ஆகிய எண்களுக்கு தொடர்பு கொண்டு தகவல்களை பெறலாம்.

தேனி குரங்கணி காட்டுத்தீயில் இருந்து மீட்கப்பட்ட 27 பேர்களில் 10 பேருக்கு எந்த காயமும் இல்லை.தீயை பார்த்து பயந்து ஓடியவர்கள் பள்ளத்திற்குள் விழுந்ததால் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது - தேனி ஆட்சியர் பல்லவி.

குரங்கணி மலையில் சிக்கியவர்களை ஹெலிகாப்டர் மூலம் மீட்க முயற்சி : மலையில் சிக்கி உள்ளவர்களை விமானப்படை ஹெலிகாப்டர் தேடி வருகிறது.

காட்டுத்தீயில் சிக்கி 8 பேர் உயிரிழந்ததாக வெளியான தகவல் வருத்தமளிக்கிறது.
காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன் - மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்.

குரங்கணி மலைப்பகுதி காட்டுத்தீயில் படுகாயம் அடைந்த 6 பேருக்கு மதுரை ராஜாஜி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

குரங்கணி மலைப்பகுதியில் மலையேற்றம் சென்ற 39 பேரில், இதுவரை 27 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.குரங்கணி வனப்பகுதியில் தீ விபத்தில் 17 பேருக்கு 40% காயம் ஏற்பட்டுள்ளது - சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்.

தேனி அரசு மருத்துவமனை வளாகத்தில் தற்காலிக ஹெலிபேட் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

குரங்கணி மலையில் சிக்கியவர்களில் 4 பேர் தீயில் இருந்து தப்பி மலைப்பாதை வழியாக கேரளாவில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

தீவிபத்தில் காயமடைந்த திருப்பூரை சேர்ந்த சத்திகலாவின் மகள்கள் சாதனா, பாவனா ஆகியோரை, வீட்டுக்கு அனுப்ப அதிகாரிகள் மறுப்பு.

தேனி : காட்டுத்தீயில் இருந்து மீட்கப்பட்ட ஈரோட்டை சேர்ந்த சிறுமி நேகா (9) பெற்றோருடன் அனுப்பிவைக்கப்பட்டார்.

ராமேஸ்வரத்தில் பலத்த சூறைக் காற்றுடன் 20 நிமிடங்களுக்கும் மேலாக மழை பெய்து வருகிறது.

காட்டுது தீ ஏற்பட்ட குரங்கணி மலையில் துணை முதல்வர் ஓபிஎஸ் மற்றும் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் ஆய்வு. 

குரங்கணி விபத்தில் மாண்டவரின் உற்றாருக்கும் உறவினருக்கும்
என் ஆழ்ந்த அனுதாபங்கள் - மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்.

தேனி : குரங்கணி காட்டுத்தீயில் சிக்கி ஈரோட்டை சேர்ந்த விஜயா, விவேக், தமிழ்ச்செல்வி ஆகியோர் உயிரிழந்துள்ளதாக தகவல் வந்துள்ளது - தேனி ஆட்சியர் பல்லவி.

தேனி : குரங்கணி காட்டுத்தீயில் சிக்கி சென்னையை சேர்ந்த புனிதா, அருண், பிரேமலதா, சுபா, விபின், அகிலா ஆகியோர் உயிரிழந்துள்ளதாக தகவல் வந்துள்ளது - தேனி ஆட்சியர் பல்லவி.

அனுமதியின் டிரெக்கிங் மேற்கொண்டதால் விபத்து நேர்ந்துள்ளது.முன் அனுமதி பெற்றிருந்தால் உரிய பாதுகாப்பு வழங்கப்பட்டிருக்கும் - அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்.

தீக்காயங்களுடன் மீட்கப்பட்ட 27 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.முகாம்கள் அமைக்கப்பட்டு மீட்பு பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளது - தேனியில் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் பேட்டி.

சென்னையில் இருந்து பெண்களை குரங்கணிக்கு டிரெக்கிங் அழைத்து சென்ற தனியார் நிறுவனம் இரவோடு இரவாக மூடல்.

தேனி: குரங்கணி காட்டுத்தீயில் காயமடைந்தவர்களுக்கு ஆறுதல் கூற தேனி மற்றும் மதுரை செல்கிறார் முதலமைச்சர் பழனிசாமி.


*மாநிலங்களவை தேர்தல்: வேட்பு மனு தாக்கல் செய்ய இன்று கடைசி நாள்*

*📆2018-03-12*

*⏰10:37:36*

🎙மத்தியப் பிரதேசம்: மாநிலங்களவைக்கு புதிய உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கான தேர்தலில் போட்டியிட பாஜகவைச் சேர்ந்த தவார் சந்த் கெலாட், அஜய் பிரதாப் சிங் மற்றும் கைலாஷ் சோனி ஆகியோர் மத்தியப் பிரதேசம் மாநிலம், போபாலில் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

🎙தேசிய அளவில் காலியாக உள்ள மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு வரும் மார்ச் 23ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. கடந்த 5ம் தேதி தொடங்கிய வேட்பு மனு தாக்கல், இன்றுடன் நிறைவடைகிறது. மார்ச் 15ம் தேதி வேட்பு மனுக்கல் பரிசீலக்கப்படும் மற்றும் மார்ச் 23ம் தேதி தேர்தல் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More