♈🇮🇳🌴 *3pm-4-3-2018-sunday-ஞாயிற்றுக்கிழமை* 🌴🇮🇳 ♈ ♈ 🇮🇳 🌴 *
இன்றைய செய்திகள் 04/03/18 Today Tamil News
♈🇮🇳 தென் கொரியாவின் ஜனாதிபதி பியோங்யாங்கிற்கும் வாஷிங்டனுக்கும் இடையில் பேச்சுவார்த்தைகளை மறுபரிசீலனை செய்ய உதவுவதன் மூலம் பேச்சுவார்த்தைகளுக்கு இந்த வாரம் வட கொரியாவிற்கு தனது தேசிய பாதுகாப்பு இயக்குனர் தலைமையில் ஒரு குழுவை அனுப்புவார்
♈🇮🇳 ஹிந்து தலித் பெண் வரலாற்றில் முதன்முறையாக பாக்கிஸ்தானின் செனட்டில் தேர்ந்தெடுக்கப்பட்டார்
♈🇮🇳மெக்சிகன் அதிகாரிகள் மூன்று இத்தாலிய நபர்கள் காணாமல் போயுள்ள விவகாரத்தில் நான்கு பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிராக கிரிமினல் நடவடிக்கைகளை மேற்கொண்டனர்
♈🇮🇳ஜேர்மன் அதிபர் அங்கேலா மேர்க்கெல் எதிர்க்கட்சி சமூக ஜனநாயகவாதிகள் மற்றொரு பெரும் கூட்டணிக்கு ஆதரவாக வாக்களித்ததன் பின்னர் தனது நான்காவது அரசாங்கத்தை அமைகிறார்
♈🇮🇳 வெள்ளிக்கிழமை மாலை உத்தரபிரதேசத்தின் கஜியாபாத்தில் உள்ள இந்திராபுரம் பிளாடில் குளியலறையில் மர்மமான சூழ்நிலைகளில் நள்ளிரவில் இறந்துள்ளனர்
♈🇮🇳மார்ச் 3 ம் தேதி பர்காஸ் சமூக மைய மருத்துவமனையில் மூன்று குழந்தைகள் நல மருத்துவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்-ஹைதராபாத்
♈🇮🇳மும்பையில் இருந்து போதைப்பொருள் கடத்தி வந்த இலங்கையை சேர்ந்த நபர் சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்
♈🇮🇳 மஹாராஷ்டிராவின் புனேவில், டீக்கடை வைத்திருக்கும் நபர் ஒருவர் மாதம் 12 லட்சம் ரூபாய் சம்பாதிப்பதாகத் தெரிவித்துள்ளார். யெவ்லே டீ ஹவுஸ் (Yewle Tea House) என்ற கடையின் உரிமையாளர் நவ்னத் யெவ்லே என்பவர் தமது டீக்கடைத் தொழிலை சர்வதேச அளவில் விஸ்தரிக்கப்போவதாகக் கூறியுள்ளார்.பிரதமர் மோடி குறிப்பிட்ட பக்கோடா தொழிலை சுட்டிக்காட்டிய அவர் டீக்கடைத் தொழிலிலும் வேலைவாய்ப்பு உண்டு எனக் குறிப்பிட்டுள்ளார். தமது 3 கடைகளின் மூலம் மாதம் 12 லட்சம் ரூபாய் வருவாய் வருவதாகவும்,ஒவ்வொரு கடையிலும் 12 ஊழியர்கள் வீதம் 36பேருக்கு தம் டீக்கடை மூலம் வேலைவாய்ப்பு கிடைத்துள்ளதாகவும் நவ்னத் யெவ்லே கூறினார்
♈🇮🇳ஆஸ்திரேலியாவில் ஒரே பாலினத்தவரை திருமணம் செய்து கொள்வோருக்கான அமைப்பின் 40வது ஆண்டு விழா கோலாகலமாக நடைபெற்றது. ஆஸ்திரேலியாவில் ஒரே பாலினத்தவரை திருமணம் செய்து கொள்ள உரிமை கோரி பல ஆண்டுகளாக போராட்டம் நடைபெற்றது.இதையடுத்து, கடந்த ஆண்டு டிசம்பரில் ஒரே பாலினத்தவர் திருமணம் செய்ய அங்கீகாரம் வழங்கி சட்டம் இயற்றப்பட்டது. இந்நிலையில், சிட்னியில் நடைபெற்ற வண்ணமயமான ஆண்டுவிழாவில் ஆண்கள்,பெண்கள் என ஏராளாமானோர் பங்கேற்றனர்
♈🇮🇳 திருவள்ளூர் அருகே ஓட்டுநரை தாக்கி,காற்றாலை உதிரி பாகங்களை ஏற்றிச் சென்ற லாரி கடத்தப்பட்டுள்ளது
♈🇮🇳 பாம்பன் ரயில்வே தூக்கு பாலத்தில் உள்ள தூண்களின் உறுதிதன்மை குறித்து மத்திய பொறியாளர்கள் குழுவினர் ஆய்வு நடத்தி வருகின்றனர். தற்போது பாலத்தில் 15 கிலோமீட்டர் வேகத்தில் ரயில்கள் இயக்கப்பட்டு வரும் நிலையில், வரும் காலங்களில் இரயில்களின் வேகத்தினை அதிகப்படுத்தவும், அதிகளவு இரயில்களை இயக்கவும் தென்னக இரயில்வே முடிவு செய்துள்ளது
♈🇮🇳 நெல்லை மாவட்டம் கடையநல்லூர் அருகே கோவிலில் உள்ள அம்மன் சிலையில் 3 நாட்களாக கிளி ஒன்று அமர்ந்துள்ளதோடு, அம்மன் சிலையில் கண்களில் இருந்து கண்ணீர் வருவதுபோல் காட்சியளிக்கிறது. கடையநல்லூர் கிருஷ்ணாபுரம் பேருந்து நிலையம் அருகே 100ஆண்டு கால பழமைவாய்ந்த குறுக்கிட்டான் கருப்பசாமி கோவில் உள்ளது
♈🇮🇳 கார்த்தி சிதம்பரம், இந்திராணி முகர்ஜி அளிக்கும் வாக்குமூலம் வீடியோ பதிவு செய்யப்பட்டுள்ளது. ஐஎன்எக்ஸ் மீடியா விவகாரம் குறித்து2 பேரிடமும் பெண் சிபிஐ அதிகாரி கேள்விகளை கேட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது
♈🇮🇳 மார்ச் 29ம் தேதிக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் பாமக சார்பில் போராட்டம் நடத்தப்படும் என இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். தமிழகத்தில் பலவீனமான முதலமைச்சர் இருப்பதால், பிரதமர் சந்திக்க மறுக்கிறார் என்று அன்புமணி கூறியுள்ளார்
♈🇮🇳 நாகலாந்தில் தேசியவாத ஜனநாயக முற்போக்கு கட்சி ஆட்சி அமைக்க உரிமைகோரியது. மாநில ஆளுநர் பி.பி.ஆச்சாரியாவை சந்தித்து ஆட்சியமைக்க உரிமைகோரினார் நெய்பு ரியோ. என்.டி.பி.பி. கட்சி தலைவர் நெய்பு ரியோவுடன் பாஜக-வின் ராம் மாதாவும் ஆளுநரை சந்தித்துள்ளார்
♈🇮🇳 சட்டமன்ற தேர்தலில் தோல்வியடைந்ததை அடுத்து முதல்வர் மாணிக் சர்க்கார் ராஜினாமா செய்துள்ளார். ஆளுநரை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை வழங்கினார்
♈🇮🇳 கர்நாடகாவில் காட்டு யானை தாக்கி உயிரிழந்த வனப்பாதுகாவலர் மணிகண்டன் குடும்பத்திற்கு குடியரசுத் தலைவர் இரங்கல் தெரிவித்துள்ளார். அதிகாரி மணிகண்டன் மறைவிற்கு நாடே மரியாதை செலுத்துகிறது என குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கூறியுள்ளார். கர்நாடகா-நாகர்ஹோளே புலிகள் காப்பாகத்தில் நேற்று காட்டு யானை தாக்கி கம்பத்தை சேர்ந்த அதிகாரி மணிகண்டன் உயிரிழந்தார்
♈🇮🇳 குமாரபாளையத்தில் ரேக்ளா பந்தயத்தில் பார்வையாளர் பகுதியில் குதிரை புகுந்ததில் 6 பேர் காயம் அடைந்தனர். பலத்த காயம் அடைந்த 6 பேரும் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்
♈🇮🇳 சேலம் மாவட்டம் ஓமலூரில் கந்துவட்டிக் கொடுமையால் குடும்பத்துடன் தீக்குளிக்க முயன்றதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது
♈🇮🇳 உலகிலேயே இந்தியாவில்தான் அதிக இளைஞர்கள் உள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இந்தியாவில் 35 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் 65% க்கும் அதிகமான அளவில் உள்ளனர் என்றும் மகத்தான இளைஞர் சக்தியால் இந்தியாவின் தலையெழுத்தை மாற்ற முடியும் எனவும் மோடி கூறியுள்ளார்
♈🇮🇳 திண்டுக்கல் வேடச்சந்தூர் அருகே விபத்து: 15 பேர் காயம்
♈🇮🇳 வன அதிகாரி மறைவுக்கு முதல்வர் பழனிசாமி இரங்கல்♈🇮🇳 *♈🇮🇳
0 comments:
Post a Comment