Hi manisat
#ref-menu

Saturday, March 3, 2018

இன்றைய செய்திகள் 03/03/18 Today Tamil News




இன்றைய செய்திகள் 03/03/18 Today Tamil News

*திரிபுராவில் இடதுசாரியை பின்னுக்கு தள்ளி பா.ஜ.க முன்னிலை....*

*நாகாலாந்து சட்டமன்ற தேர்தலில் என்.பி.எஃப் 33 இடங்களிலும், பாஜக கூட்டணி 23 இடங்களிலும் முன்னிலை.*

*திரிபுரா: இடதுசாரி-30, பாஜக-28 இடங்களில் முன்னிலை.*

*மேகாலயா: காங்.-21, என்.பி.பி-15, பாஜக-6 இடங்களில் முன்னிலை.*
*சிரியாவில் நடப்பது அப்பட்டமான போர்க்குற்றம்: ஐநா மனித உரிமை பிரிவு அறிவிப்பு*

ஜெனிவா: சிரியாவில் அரசுப்படைகளும், ரஷ்யப்படைகளும் 13 நாட்களாக நடத்தி வரும் தாக்குதலில் பலி எண்ணிக்கை 674ஆக உயர்ந்துள்ளது.

சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸ் அருகேயுள்ள கிழக்கு கவுட்டா நகரில் அரசுப்படைகளின் ஆதரவுடன் கிளர்ச்சியாளர்கள் மீது தாக்குதல் நடத்துவதாக கூறி ரஷ்ய விமானப்படை குண்டுவீசி வருகிறது. இந்த தாக்குதலில் நூற்றுக்கணக்கான குழந்தைகள் உட்பட ஏராளமானோர் உயிரிழந்து வருகின்றனர். ரஷ்யாவின் இந்த தாக்குதலுக்கு சர்வதேச நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதையடுத்து தினமும் ஐந்து மணிநேரம் தாக்குதல் நிறுத்தி வைக்கப்படும் என்று ரஷ்யா தெரிவித்தது. 

இருந்தபோதிலும் வான்வழித் தாக்குதல் நடத்தி வருவதாக பல்வேறு நாடுகள் குற்றம்சாட்டி வருகின்றனர். இந்நிலையில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணைய பேரவை ரஷ்யாவிற்கு கண்டனம் தெரிவித்துள்ளது. சிரியாவில் நடைபெற்று வரும் போர் விவகாரம் தொடர்பாக ஸ்விட்சர்லாந்து தலைநகர் ஜெனிவாவில் கூடிய மனித உரிமை பிரிவு கூட்டத்தில் பெரும்பாலான நாடுகளின் உறுப்பினர்கள் பங்கேற்றனர். அப்போது பேசிய சிரியா பிரதிநிதி, தாங்கள் நடத்தி வரும் தாக்குதலை உலக நாடுகள் மிகைப்படுத்தி வருவதாக கூறியுள்ளார். இறுதியில் பேசிய மனித உரிமை ஆணைய பேரவை தலைவர், சிரியாவில் நடப்பது அப்படமான போர்க்குற்றம் என்றும் கிளர்ச்சியாளர்களை காரணம் காட்டி அப்பாவி பொதுமக்களை கொல்வது நிறுத்தப்பட வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். 
*🔵 ELECTION*

*✍3 மாநில தேர்தல் முடிவுகள்- திரிபுராவில் மாக்சிஸ்ட், பாஜக இடையே கடும் போட்டி*

*✍நாகாலாந்து(59/60)*

பாஜக- 24
என்பிஎஃப்-32
காங்கிரஸ்- 0
மற்றவை-3

*✍திரிபுரா(59/59)*

மார்க்சிஸ்ட்-30
பாஜக- 28 
மற்றவை- 1

*✍மேகாலயா(56/59)*

காங்கிரஸ்-21
பாஜக- 0
என்பிபி- 15
மற்றவை- 20
*திரிபுரா சட்டசபை தொகுதியில் 34 இடங்களில் பாஜக முன்னிலை.*

*மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 25 இடங்களில் முன்னிலை பெற்று இரண்டாம் இடத்தில் உள்ளது.*
*🔰🔰அனைத்துக் கட்சி தலைவர்களுடன் முதலமைச்சரை சந்திக்க பிரதமர் மறுத்துவிட்டார் என்பது முற்றிலும் தவறானது : அமைச்சர் ஜெயக்குமார்*

*🔰🔰தமிழகத்தில் 5 #தாய்ப்பால் #வங்கிகள் அமைக்கப்பட உள்ளது: அமைச்சர் #விஜயபாஸ்கர் தகவல்*

சென்னை: தமிழகத்தில் 5 தாய்ப்பால் வங்கிகள் அமைக்கப்பட உள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல் தெரிவித்துள்ளார். சென்னையில் ரூ.10 கோடியில் குழந்தைகள் சிறப்பு சிகிச்சை மையம், ரூ 20 கோடியில் இருதய நோய் சிறப்பு சிகிச்சை மையம் அமைக்கப்படும் என்றும் அமைச்சர் தகவல் கூறியுள்ளார். 
*🔰🔰திரிபுராவில் மார்க்சிஸ்டை விட பாஜக அதிக இடங்களில் முன்னிலையில் உள்ளது...*

*🔰🔰தற்போதைய நிலவரப்படி,*



*⭕⭕பாஜக கூட்டணி- 32*
*மார்க்சிஸ்ட் - 26*
*அதேபோல் நாகாலாந்திலும் பாஜக கூட்டணி முன்னிலையில் உள்ளது; மேகாலயாவில் காங்கிரஸ் முன்னிலையில் உள்ளது*
*FLASH NEWS*

*காவிரி விவகாரத்தில் பிரதமருக்கு அழுத்தம் தர தமிழக எம்.பி.க்கள் ராஜினாமா செய்யலாம் : ஸ்டாலின்*

சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் ஸ்டாலின் காவிரி விவகாரம் தொடர்பாக ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக்கு பிறகு எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். இதில் திங்கள் கிழமைக்குள் பிரதமரிடமிருந்து அழைப்பு வராவிட்டால் வருகிற 8ம் தேதி சட்டமன்றம் கூட்டப்படும் என முதலமைச்சர் உறுதி அளித்துள்ளதாக கூறிய அவர், காவிரி விவகாரத்தில் பிரதமர் அனைத்து கட்சியினரை சந்திக்க மறுத்தால் தமிழக எம்.பிக்கள் ராஜினாமா செய்ய வலியுறுத்துவோம் என்றும் ஸ்டாலின் கூறினார்.
*✅🔰முதற்கட்டமாக 77 ஆயிரம் குழந்தைகளுக்கு தைராய்டு சிறப்பு சிகிச்சை அளிக்கப்படும்.*

*சிகிச்சை பலனளித்தால் தைராய்டால் பாதிக்கப்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் சிகிச்சை அளிக்கப்படும் : அமைச்சர் விஜயபாஸ்கர்*



*✅🔰மக்கள் நீதி மய்யம் உறுப்பினர் சேர்க்கை படிவம் ஆழ்வார் பேட்டையில் உள்ள கமல் அலுவலகத்தில் வந்து இறங்கியது*



*✅🔰சிரியா போரை நிறுத்த வேண்டி, “சிரியா மண்ணே சிரி” என்ற கவிதை வீடியோ வெளியிட்டார் கவிஞர் வைரமுத்து!*



 *✅🔰ஆந்திராவில் கைதாகி விடுவிக்கப்பட்ட 84 தமிழர்களில் முதற்கட்டமாக 43 பேர் தமிழகம் புறப்பட்டனர்*

*தமிழக அரசு பேருந்தில் 43 தமிழர்களும் முதற்கட்டமாக சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்*
*✅🔰 நாகை : தரங்கம்பாடி அடுத்த மருதம்பள்ளம் கிராமத்தில் சாராய விற்பனை குறித்து புகார் தெரிவித்தவருக்கு கத்திக்குத்து.*

*சீனிவாசன் என்பவரை கத்தியால் குத்திய செங்குட்டுவன், ரகு ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.*
*✅🔰கம்யூனிஸ்ட்களின் கோட்டையா இருந்த திரிபுரா மாநில முதல்வர் ஆகிறார்,ஆர் எஸ் எஸ் பின்னணி கொண்ட பிலவ் தேப்*
*✅🔰3 மாநிலங்களிலும் பாஜக வரலாறு படைக்கக் காத்திருக்கிறது: யோகி ஆதித்யநாத்*


*திரிபுரா, மேகாலயா மற்றும் நாகாலாந்து ஆகிய 3 வடகிழக்கு மாநிலங்களின் வாக்கு எண்ணிக்கை சனிக்கிழமை காலை 8 மணிக்குத் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் திரிபுரா மற்றும் நாகாலாந்து மாநிலங்களில் பாஜக தொடர்ந்து முன்னிலையில் உள்ளது. மேகாலயாவில் காங்கிரஸ், பாஜக கூட்டணி இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. அதிலும் திரிபுரா மற்றும் நாகாலந்து மாநிலங்களில் ஆட்சியமைக்கத் தேவையான இடங்களுக்கு மேல் பாஜக கூட்டணி தொடர்ந்து முன்னிலையில் நீடித்து வருகிறது. இதனால் அக்கட்சித் தொண்டர்கள் உற்சாகத்தில் உள்ளனர். இதுகுறித்து உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியதாவது: திரிபுராவில் பாஜக வரலாறு படைக்க காத்திருக்கிறது. பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா மற்றும் கட்சியினருக்கு வாழ்த்து தெரிவித்துக்கொள்கிறேன். மேகாலயாவிலும் பாஜக-வின் இந்நிலை பாராட்டுக்குரியதாக அமைந்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. இந்திய இந்திய தேர்தல் வரலாற்றில் முக்கியமான நாளாக அமைந்துள்ளது என்றார். பாஜக தேசிய செயலாளர் ராம் மாதவ், மத்திய அமைச்சர் கிரண் ரிஜ்ஜு உள்ளிட்ட பாஜக தலைவர்கள் தங்களது வாழ்த்தினை தெரிவித்துள்ளனர். இந்த 3 மாநிலங்களிலும் உள்ள பாஜக கட்சியைச் சேர்ந்த தொண்டர்கள் பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடத் தொடங்கிவிட்டனர்.*
*காவிரி பிரச்சினை தொடர்பாக முதல்வருடன் ஆலோசித்தார் ஸ்டாலின்.*

*முதல்வரை சந்தித்து விட்டு ஸ்டாலின் செய்தியாளர் சந்திப்பு.*

*தலைமை செயலகத்தில் காவிரி பிரச்சினை பற்றி ஆலோசனை நடத்தினோம்.*

*காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது - ஸ்டாலின்.*

*முதல்வரின் அழைப்பை ஏற்று இன்று ஆலோசனை நடத்தினோம் - ஸ்டாலின்.*

*அரசு நடத்திய ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றோம் - ஸ்டாலின்.*

*சட்டசபையில் சிறப்பு தீர்மானம் நிறைவேற்ற கூறியுள்ளோம் - ஸ்டாலின்.*

*திங்கட்கிழமை வரை காத்திருப்போம் என்று முதல்வர் கூறியுள்ளார் - ஸ்டாலின்.*

*8ஆம் தேதி சட்டசபையை கூட்டி தீர்மானம் நிறைவேற்றப்போவதாக தகவல் - ஸ்டாலின்.*
*திரிபுராவில் தோல்வியைச் சந்தித்தது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்.*

*25 வருடங்களில் இல்லாத தோல்வியால் இடதுசாரிகள் அதிர்ச்சி.*

*மேற்கு வங்கத்தைத் தொடர்ந்து இடதுசாரிகளின் இன்னொரு கோட்டையும் சரிந்தது.*

*40 இடங்களில் வென்று ஆட்சியைப் பிடித்தது பாஜக கூட்டணி.*
🔵🔴🔵

*கேரள முதலமைச்சர் சென்னை கிரீம்ஸ் ரோடு அப்பல்லோவில் அனுமதி.*

*"கேரள முதல்வர் பினராயி விஜயன் நாளை மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.*

 *இதுகுறித்து மருத்துவ அறிக்கை வெளியிட்டுள்ள அப்பல்லோ மருத்துவமனை, வழக்கமான மருத்தவ பரிசோதனைக்காக பினராயி அப்பல்லோ மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவித்துள்ளது.*
சென்னை அடையாறில் பொறியியல் மாணவிக்கு பாலியல் தொந்தரவு: மது போதையில் வடமாநில இளைஞர் வெறிச்செயல்
இந்தியா-வியட்நாம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து

இந்தியா-வியட்நாம் இடையே பாதுாப்பு, தொழில்நட்பம் உள்ளிட்ட துறைகளில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளது. பாதுகாப்பு மற்றும் நவீன தொழில்நுட்பத்தில் இரு நாடுகளும் இணைந்து செயல்பட முடிவு செய்யப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி கூறியுள்ளார்.
ஆந்திராவில் விடுவிக்கப்பட்ட 43 பேர் தமிழர்கள் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைப்பு

ஆந்திராவில் கைதாகி விடுவிக்கப்பட்ட 84 தமிழர்களில் முதற்கட்டமாக 43 பேர் தமிழகம் புறப்பட்டனர். தமிழக அரசு பேருந்தில் 43 தமிழர்களும் முதற்கட்டமாக சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்
மார்ச் 6ம் தேதி ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த முடிவு: பி.ஆர்.பாண்டியன்

மார்ச் 6ம் தேதி ஆளுநர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளதாக விவசாய சங்கத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் தெரிவித்துள்ளார். மன்னார்குடியில் செய்தியாளர்களை சந்தித் அவர், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மறுக்கும் மத்திய அரசை கண்டித்து முற்றுகை போராட்டம் நடத்தப்படவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
உளுந்தூர்பேட்டை அருகே கர்ப்பிணி பெண் கழுத்தறுத்து கொலை

 உளுந்தூர்பேட்டை அருகே பாண்டூர் கிராமத்தில் 6 மாத கர்ப்பிணி பெண் சுதா கழுத்தறுத்து கொல்லப்பட்டார். கொலை வழக்கில் தலைமறைவான கணவர் நாராயணனை போலீசார் தேடி வருகின்றனர்
மத்திய அரசை தொடர்ந்து அணுகி புதுச்சேரிக்கு தேவையான நிதியை கேட்போம்: முதல்வர் நாரயணசாமி

புதுச்சேரிக்கு தேவையான நிதியை பிரதமர் மோடி அறிவிக்காதது குறித்து புதுச்சேரி முதல்வர் நாரயணசாமி வருத்தம் தெரிவித்துள்ளார். இதுவரை புதுவைக்கு வந்த பிரதமர்களிலேயே புதுச்சேரிக்கு நிதி அறிவிக்காமல் சென்றவர் மோடி தான் என அவர் கூறியுள்ளார். மத்திய அரசை தொடர்ந்து அணுகி புதுச்சேரிக்கு தேவையான நிதியை கேட்போம் என நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
ஆத்தூர் எஸ்.பி.ஐ., வங்கி உதவி மேலாளர் கைது
ஸ்ரீதேவியாக நடிக்க யாருக்கும் தகுதியில்லை: ராம் கோபால் வர்மா
துபாய் ஓபன் டென்னிஸ்: பைனலில் பயஸ் ஜோடி
ஒட்டன்சத்திரம் அருகே டீக்கடையில் கார் புகுந்ததில் மூதாட்டி பலி
மர்லின் மன்றோவின் மர்மமான மரணம்! 

போதை மருந்து எடுத்துக் கொண்டதால் இறந்தார் என்று கூறப்பட்டது. ஆனால், இவருக்கும் ஜான் கென்னடிக்கும் இருந்த இரகசிய உறவே இவரது மரணத்திற்கு காரணம் என்ற வதந்திகளும் இவரது மர்மமான மரணத்தின் பின்னணியில் பேசப்படுகிறது.
அளவுக்கு அதிகமான போதை பொருள் எடுத்துக் கொண்டது என்ற காரணம், ஒருவேளை யாராவது அதிக அளவில் இவருக்கு போதை மருந்தை கட்டாயப்படுத்தி கொடுத்து கொலை செய்தும் இருக்கலாம் என்ற சந்தேகத்தை எழுப்பியது.
சொந்த வீடு கூட இல்லாத திரிபுரா முதல்வர் மாணிக் சர்க்கார்.. 5வது முறை முதல்வர் கனவு கலைந்தது!
சிரியாவில் நடப்பது அப்பட்டமான போர்க்குற்றம்: ஐநாவின் மனித உரிமை ஆணையம் கண்டனம்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சோபனூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவர்களிடம், ஆசிரியர்கள் சமையல் பாத்திரங்களை கழுவ வைப்பது, வகுப்பறைகள் மட்டுமின்றி பள்ளி வளாகம், கழிவறையை சுத்தம் செய்ய வைக்கும் கொடுமை நடந்து வருகிறது.
*திருமணம் செய்வதாக கூறி பலரை ஏமாற்றிய ஸ்ருதி மீது குண்டர் சட்டம்*


கோவை: திருமணம் செய்வதாக கூறி பலரை ஏமாற்றிய ஸ்ருதி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. ஸ்ருதி தாய் சித்ரா மற்றும் தந்தை பிரசன்னா வெங்கடேஷ் மீதும் குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.
_*🚆EXPRESS NEWS🚊*_

*♨ திரைப்பட பைனான்சியர் பேத்ரா மகள் மாயம்♨*

_💫சென்னை: சென்னை திரைப்பட பைனான்சியர் பேத்ராவின் மகள் கரிஷ்மா பேத்ரா மாயமானார். கரிஷ்மா கடத்தப்பட்டதாக தியாகராயார் நகரில் புகார் தந்துள்ளதாக பேத்ரா கூறியுள்ளார். தியாகராயார் நகரில் தங்கியிருந்த கரிஷ்மாவை கடந்த 2 நாளாக காணவில்லை என்று தெரிவித்துள்ளார்._

*♨ இந்தியா - வியட்நாம் இடையே பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில் புரிந்துணர்வு ஒப்பந்தம்♨*

_💫புதுடெல்லி: இந்தியா - வியட்நாம் இடையே பாதுகாப்பு, தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகளில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகின. பாதுகாப்பு மற்றும் நவீன தொழில்நுட்பத்தில் இருநாடுகளும் இணைந்து செயல்பட முடிவு செய்யப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மேலும் இந்தோ பசிபிக் பகுதியில் சர்வதேச சட்டம், இறையாண்மையை நிலை நாட் இணைந்து செயல்படுவோம் என்று மோடி தெரிவித்தார்._

*♨ திருமணம் செய்வதாக கூறி பலரை ஏமாற்றிய ஸ்ருதி மீது குண்டர் சட்டம்♨*

_💫கோவை: திருமணம் செய்வதாக கூறி பலரை ஏமாற்றிய ஸ்ருதி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. ஸ்ருதி தாய் சித்ரா மற்றும் தந்தை பிரசன்னா வெங்கடேஷ் மீதும் குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது._

*♨ ஆந்திராவில் விடுவிக்கப்பட்ட 43 பேர் தமிழர்கள் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைப்பு♨*

_💫திருப்பதி : ஆந்திராவில் கைதாகி விடுவிக்கப்பட்ட 84 தமிழர்களில் முதற்கட்டமாக 43 பேர் தமிழகம் புறப்பட்டனர். தமிழக அரசு பேருந்தில் 43 தமிழர்களும் முதற்கட்டமாக சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்_

*♨ மார்ச் 6ம் தேதி ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த முடிவு: பி.ஆர்.பாண்டியன்♨*

_💫மன்னார்குடி: மார்ச் 6ம் தேதி ஆளுநர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளதாக விவசாய சங்கத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் தெரிவித்துள்ளார். மன்னார்குடியில் செய்தியாளர்களை சந்தித் அவர், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மறுக்கும் மத்திய அரசை கண்டித்து முற்றுகை போராட்டம் நடத்தப்படவுள்ளதாக தெரிவித்துள்ளார்._

*♨ உளுந்தூர்பேட்டை அருகே கர்ப்பிணி பெண் கழுத்தறுத்து கொலை♨*

_💫விழுப்புரம் : உளுந்தூர்பேட்டை அருகே பாண்டூர் கிராமத்தில் 6 மாத கர்ப்பிணி பெண் சுதா கழுத்தறுத்து கொல்லப்பட்டார். கொலை வழக்கில் தலைமறைவான கணவர் நாராயணனை போலீசார் தேடி வருகின்றனர்._

*♨ நாகையில் சாராய விற்பனை குறித்து புகார் தெரிவித்தவருக்கு கத்திக்குத்து♨*

_💫நாகை : நாகையில் தரங்கம்பாடி அடுத்த மருதம்பள்ளம் கிராமத்தில் சாராய விற்பனை குறித்து புகார் தெரிவித்தவருக்கு கத்திக்குத்து ஏற்பட்டுள்ளது. சீனிவாசன் என்பவரை கத்தியால் குத்திய செங்குட்டுவன், ரகு ஆகியோரை போலீசார் கைது செய்தனர்._

*♨ மத்திய அரசை தொடர்ந்து அணுகி புதுச்சேரிக்கு தேவையான நிதியை கேட்போம்: முதல்வர் நாரயணசாமி♨*

_💫புதுச்சேரி: புதுச்சேரிக்கு தேவையான நிதியை பிரதமர் மோடி அறிவிக்காதது குறித்து புதுச்சேரி முதல்வர் நாரயணசாமி வருத்தம் தெரிவித்துள்ளார். இதுவரை புதுவைக்கு வந்த பிரதமர்களிலேயே புதுச்சேரிக்கு நிதி அறிவிக்காமல் சென்றவர் மோடி தான் என அவர் கூறியுள்ளார். மத்திய அரசை தொடர்ந்து அணுகி புதுச்சேரிக்கு தேவையான நிதியை கேட்போம் என நாராயணசாமி தெரிவித்துள்ளார்._

*♨ காவிரி விவகாரம் தொடர்பாக முதல்வர்-எதிர்க்கடசி தலைவர் சந்திப்பு வரவேற்கத்தக்கது: தா.பாண்டியன்♨*

_💫ஈரோடு: காவிரி விவகாரம் தொடர்பாக முதல்வர்-எதிர்க்கடசி தலைவர் சந்திப்பு வரவேற்கத்தக்கது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் கூறியுள்ளார். ஈரோட்டில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், காவிரி மேலாண்மை வாரியம் குறித்து மத்திய அரசு கூறிவரும் கருத்துகள் நீதிமன்றத்தக்கு எதிரானது என கூறியுள்ளார்._

*♨ தமிழகத்தில் 5 தாய்ப்பால் வங்கிகள் அமைக்கப்பட உள்ளது: அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்♨*

_💫சென்னை: தமிழகத்தில் 5 தாய்ப்பால் வங்கிகள் அமைக்கப்பட உள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல் தெரிவித்துள்ளார். சென்னையில் ரூ.10 கோடியில் குழந்தைகள் சிறப்பு சிகிச்சை மையம், ரூ 20 கோடியில் இருதய நோய் சிறப்பு சிகிச்சை மையம் அமைக்கப்படும் என்றும் அமைச்சர் தகவல் கூறியுள்ளார்._

*♨ கழிவுநீர் தொட்டியில் தவறி விழுந்து உயிரிழந்த மாணவனின் குடும்பத்திற்கு முதலமைச்சர் நிதியுதவி♨*

_💫சென்னை: காஞ்சிபுரம் - ஆலந்தூர் சீனிவாசபுரத்தில் கழிவுநீர் தொட்டியில் தவறி விழுந்து உயிரிழந்த மாணவனின் குடும்பத்திற்கு நிதியுதவி அளிக்கப்பட்டுள்ளது. மாணவன் கீர்த்தீஸ்வரன் குடும்பத்திற்கு ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். மேலும் உயிரிழந்த மாணவனின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்._

*♨ கேரள முதல்வர் பினராயி விஜயன் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதி♨*

_💫சென்னை: கேரள முதல்வர் பினராயி விஜயன் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வழக்கமான பரிசோதனைக்கு அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும், நாளை வீடு திரும்புவார் என்றும் மருத்துவமனை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது._
*✅🔰காவிரிப் படுகையில், தமிழக மக்களுக்கு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் துரோகம்: கமல்ஹாசன்*

 நடிகர் கமல்ஹாசன் தனது கட்சிக்கு மக்கள் நீதி மய்யம் எனப் பெயரிட்டு, அரசியல் களத்தில் தீவிரமாக பணியாற்றி வருகிறார். மதுரை பொதுக் கூட்டத்தைத் தொடர்ந்து வரும் ஏப்ரல் மாதம் திருச்சியில் பொதுக் கூட்டம் நடைபெறும் என்று அறிவித்தார். இதனிடையே, மகளிர் தினத்தை முன்னிட்டு, சென்னையில் வரும் 8-ஆம் தேதி பொதுக் கூட்டத்தை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மக்கள் நீதி மய்யத்தின் மகளிர் அணி நிர்வாகள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றுகின்றனர். இறுதியாக மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் உரையாற்றுகிறார். இதில் கமல்ஹாசன், பெண்கள் கேட்கும் கேள்விகளுக்கும் பதிலளிக்கவுள்ளார் என்ற அறிவிப்பு அக்கட்சி தரப்பில் வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில், தனது ட்விட்டர் பக்கத்தில் மேலும் ஒரு அரசுத்துறை செயலற்று இருப்பதாக கமல்ஹாசன் குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: மேலும் ஒரு அரசுத்துறை செயலற்று இருப்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. காவிரிப் படுகையில் மாசுக்கட்டுப்பாடு வாரியத்தின் செயல்கள் அதிர்ச்சி அளிக்கிறது. தமிழ் மக்களின் நம்பிக்கைக்குத் துரோகம் இழைக்கிறது வாரியம். மாசுக்கட்டுப்பாடு வாரியமே விழித்தெழு என்றிருந்தது.

மேலும் ஒரு அரசுத்துறை செயலற்று இருப்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. காவிரிப் படுகையில் மாசுக்கட்டுப்பாடு வாரியத்தின் செயல்கள் அதிர்ச்சி அளிக்கிறது . தமிழ் மக்களின் நம்பிக்கைக்குத் துரோகம் இழைக்கிறது வாரியம் . மாசுக்கட்டுப்பாடு வாரியமே விழித்தெழு
*✅🔰கோட்டைகளாக திகழ்ந்த மாநிலங்களில் கோட்டைவிட்டது கம்யூனிஸ்ட்: ஈஸ்வரன்*

கம்யூனிஸ்ட் கட்சியினுடைய கோட்டைகளாக திகழ்ந்த மேற்கு வங்கம், திரிபுராவில் ஆட்சியை இழந்திருக்கிற நிலையில், தேய்ந்து கொண்டிருக்கின்ற கம்யூனிஸ்ட் இயக்கங்கள் தங்களை தூக்கி நிறுத்திக்கொள்ள அடிப்படை கொள்கைகளை பரிசீலித்து காலத்திற்கு ஏற்ற மாற்றங்களை கொண்டு வர முயற்சிக்க வேண்டும் என கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர் ஈஸ்வரன் கூறியுள்ளார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கின்ற கே.பாலகிருஷ்ணன் அவர்களுக்கு வாழ்த்துக்கள். 50, 60 ஆண்டுகளுக்கு முன்னாள் இந்தியாவில் இருந்த நிலைமை வேறு. தொழிலாளர்களுக்கான அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டு வந்த காலகட்டம் அது. இன்றைய சூழ்நிலையில் அனைத்து குடும்பங்களும் கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்து கொண்டிருக்கின்ற நிலையில் படித்தவர்கள் அதிகமாகி விழிப்புணர்வு மேம்பட்டு இருக்கிறது. இதற்கு கம்யூனிஸ்ட் கட்சிகளுடைய அடிப்படை கொள்கைகளும், தொழிலாளர்களின் பாதுகாப்பு நிலைப்பாடுகளும் ஒரு காரணமாக இருந்திருக்கிறது என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. சமுதாயம் விழிப்புணர்வு அடைந்திருக்கின்ற நிலையில், 50 ஆண்டுகள் கழித்து இன்றைக்கு அதனுடைய தேவை குறைந்திருக்கிறது. பல தொழிற்சாலைகளுக்கு அடிமட்ட வேலைகளுக்கு ஆட்கள் கிடைக்காத சூழ்நிலையில் அந்தந்த தொழிற்சாலைகளே தங்களுடைய தொழிலாளர்கள் மீது அதிகம் கவனம் செலுத்தி தக்க வைத்து கொள்ள முயற்சிக்கிறார்கள். மேற்கு வங்கத்தை தொடர்ந்து இன்றைக்கு திரிபுராவிலும் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சியை இழந்திருக்கிறது. மேற்குறிப்பிட்ட இரண்டு மாநிலங்களிலும் கம்யூனிஸ்ட் கட்சியினுடைய கோட்டைகளாக திகழ்ந்தவை. உலகத்தில் பல நாடுகளிலும் கம்யூனிஸ்ட் கட்சிகள் தங்கள் அடிப்படை கொள்ளைகளில் காலத்திற்கு ஏற்றவாறு சில மாற்றங்கள் செய்திருக்கிறார்கள் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். அதே சமயத்தில் கம்யூனிஸ்ட் இயக்கங்களுடைய பணி ஒரு நாட்டிற்கு கண்டிப்பாக தேவைப்படுகிறது. அப்படி இருக்கின்ற சூழ்நிலையில் தேய்ந்து கொண்டிருக்கின்ற கம்யூனிஸ்ட் இயக்கங்கள் தங்களை தூக்கி நிறுத்திக்கொள்ள அடிப்படை கொள்கைகளை பரிசீலித்து காலத்திற்கு ஏற்ற மாற்றங்களை கொண்டு வர முயற்சிக்க வேண்டும். கம்யூனிஸ்ட் இயக்கத்தில் உள்ள எளிமை பாராட்டப்பட வேண்டியது. ஆனால் அதே சமயத்தில் வெகுஜன ஆதரவு கொள்கைகளை உட்புகுத்த வேண்டிய அவசியம் இருக்கிறது. ஒரு நல்லெண்ண அடிப்படையில் இந்த தருணத்தில் இந்த கருத்துக்களை சொல்லிக் கொள்ள ஆசைப்படுகிறோம் என தெரிவித்துள்ளார்.
*✅🔰தமிழக எம்.பி.க்கள் ராஜிநாமா செய்வதற்கு அரசு ஒப்புகொள்ளுமா?: ஸ்டாலின் விளக்கம்*


திமுக செயல் தலைவரும், தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்களின் அழைப்பை ஏற்று, இன்று தலைமைச் செயலகத்தில் அவரை நேரில் சந்தித்து, காவேரி மேலாண்மை வாரியம் அமைப்பது குறித்து ஆலோசனை மேற்கொண்டார். சந்திப்புக்கு பின்னர் மு.க.ஸ்டாலின் அவர்கள் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி விவரம்: நேற்றைய தினம் தமிழக முதல்வர் அலுவலகத்தில் இருந்து தொலைபேசி மூலம் என்னைத் தொடர்புகொண்டு, “முதல்வர் அவர்கள் தங்களோடு பேசுவதற்கு விருப்பம் தெரிவித்து இருக்கிறார், காலை 10:30 மணியளவில் வர முடியுமா?”, என்று கேட்டனர். அவர்களிடத்தில், “இன்று பல்வேறு பணிகள் இருப்பதாலும், காவிரி விவகாரம் குறித்த முழு விவரங்களை அறிந்து வைத்திருக்கின்ற எங்களுடைய எதிர்க்கட்சியின் துணைத் தலைவர் இன்று ஊரில் இல்லை, எனவே, அவர் சென்னை வந்தவுடன், நாளை வருகிறோம்”, என்றும் தெரிவித்தேன். அதன்படி, இன்று காலை 10.30 மணியளவில் வந்து சந்திக்க அழைப்பு விடுத்திருந்தார்கள். அந்த அழைப்பை ஏற்று, இன்று எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் நானும், துணைத் தலைவர் துரைமுருகன் அவர்களும் தமிழக முதல்வரை சந்தித்தோம். குறிப்பாக, 6 வார காலத்துக்குள் காவேரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருக்கிறது. அந்தத் தீர்ப்பை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்ற அடிப்படையில், உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் என்றமுறையில், ஆளும்கட்சியை நான் தொடர்ந்து வலியுறுத்தி வந்தேன். ஆனால், உரிய பதில் வராத காரணத்தால், 23-ஆம் தேதியன்று திமுக தலைமையில், தோழமைக் கட்சிகள் மற்றும் ஒத்த கருத்துடைய எல்லா கட்சிகளையும் அழைத்து, அனைத்து கட்சி கூட்டம் நடத்த முடிவெடுத்து, அதற்கான ஏற்பாடுகளை நான் செய்து கொண்டிருந்த நேரத்தில், 22-ஆம் தேதியன்று அனைத்து கட்சி கூட்டம் கூட்டுவதாக திடீரென ஒரு அறிவிப்பை அரசு வெளியிட்டது.

இதனை அறிந்தவுடன், நாங்கள் கூட்டவிருந்த அனைத்து கட்சிகள் கூட்டத்தை ரத்து செய்துவிட்டு, அரசின் சார்பில் நடைபெறும் அனைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்க முடிவெடுத்து, அதன்படி பங்கேற்றோம். அந்தக் கூட்டத்தில், தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்களையும், விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளையும் தமிழக அரசின் சார்பில் டெல்லிக்கு அழைத்துச் சென்று, பிரதமர் அவர்களை நேரில் சந்தித்து, உடனடியாக காவேரி மேலாண்மை வாரியத்தை அமைக்கும்படி வலியுறுத்த வேண்டும் என்று ஒரு தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று எடுத்துச் சொல்லி, அதன்படி அந்தத் தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. அப்படி தீர்மானம் நிறைவேற்றி ஒரு வாரகாலம் முடிந்த நிலையில், இதுவரை மத்திய அரசிடம் இருந்தும், பிரதமரிடம் இருந்தும் எந்தவொரு பதிலும் வரவில்லை. இதற்கிடையில், இன்று முதல்வர் எங்களை அழைத்துப் பேசுகையில், ”பிரதமர் சந்திக்க மறுக்கிறார். வேண்டுமெனில் அந்தத் துறையின் அமைச்சரை நீங்கள் சந்தியுங்கள், என்று எங்களுக்கு தகவல் வந்திருக்கிறது. என்ன செய்யலாம்?”, என்று கேட்டார். நான் கேட்க விரும்புவது, முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனியாக சென்றால் சந்திக்கிறார். அதேபோல, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் சென்றால் சந்திக்கிறார். அதுமட்டுமல்ல, யார் யாரையோ தனித்தனியாக சந்திக்கின்ற பிரதமர், தமிழகத்தின் வாழ்வாதாரப் பிரச்னையில், குறிப்பாக, அனைத்து கட்சிகளின் தலைவர்கள், விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றியும், பிரதமர் சந்திக்க மறுப்பது, எங்களுக்கு மட்டும் கிடைத்த அவமானமில்லை. ஒட்டுமொத்தமாக தமிழகத்திற்கே கிடைத்திருக்கின்ற அவமானம் என்பதை நான் மிகுந்த வருத்தத்தோடும், வேதனையோடும் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். எனவே, “என்ன செய்யலாம்?”, என்று முதல்வர் கேட்டதும், உடனடியாக சட்டப்பேரவையை கூட்டி, பிரதமரை சந்திப்பது குறித்த தீர்மானம் நிறைவேற்றலாம், என்று கோரிக்கை வைத்தோம். அவர்களும் அதனை ஏற்றுக் கொண்டு, “திங்கட்கிழமை வரை பொறுத்துப் பார்க்கலாம், அன்றைக்கு புதிய செய்தி வர வாய்ப்பிருக்கிறது, அப்படியொரு தகவலும் வந்திருக்கிறது. அப்படி வரவில்லை என்றால், உங்களுடைய கோரிக்கையை ஏற்று எதிர்வரும் 8-ஆம் தேதியன்று சட்டப்பேரவையை கூட்டுகிறோம்”, என்ற உறுதியை முதல்வர் வழங்கியிருக்கிறார்.

மேலும், அனைத்து கட்சி தலைவர்களை சந்திக்கவும், காவேரி விவகாரத்தில் உடனடியாக தலையிடவும் பிரதமர் மறுத்தால், பேரவையை கூட்டுகின்ற செய்தியை அறிவிப்பது மட்டுமல்லாமல், உங்களுடைய கட்சியின் சார்பில் இருக்கின்ற 50 எம்.பி.க்கள், திமுக சார்பில் இருக்கின்ற 4 எம்.பி.க்கள், அத்துனை பேரும் ராஜிநாமா செய்வோம், என்றும் அறிவித்து மத்திய அரசுக்கு அழுத்தம் தர வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டிருக்கிறோம். எனவே, எதிர்வரும் 8-ஆம் தேதியன்று சட்டப்பேரவை கூடும்போது, இதையொட்டி மேலும் பல கருத்துகளை நாங்கள் முன்வைப்போம் என்றார். பின்னர் செய்தியாளர்கள் இந்தப் பிரச்னையில் இருந்து தப்பித்துக் கொள்வதற்காக தமிழக அரசு தற்போது உங்களை அழைத்துப் பேசியதாக கூறப்படுகிறதே? என்ற கேள்விக்கு பதிலளிக்கையில், அப்படி எனக்குத் தெரியவில்லை. ஒருவேளை நீங்கள் சொல்வது போலவும் அவர்களும் நினைத்திருக்கலாம். ஆனால், நாங்கள் இந்தப் பிரச்னையை அப்படியே விடுவதாக இல்லை. தற்போது, சட்டமன்றத்தைக் கூட்ட வேண்டும் என்ற எங்களுடைய கோரிக்கையை அவர்கள் ஏற்றுக் கொண்டுள்ளார்கள். ஒட்டுமொத்த எம்.பி.க்கள் ராஜினாமா செய்வது குறித்தும் தெரிவித்திருக்கிறோம். அதுபற்றி சட்டமன்றம் கூடும்போது பேசலாம் என்று அவர்கள் தெரிவித்து இருக்கிறார்கள். எம்.பி.க்கள் ராஜிநாமா செய்வதற்கு அரசு ஒப்புகொள்ளுமா? என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, அவர்களிடமே இதுகுறித்து கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். எங்களைப் பொறுத்தவரையில், திமுக சார்பில் எம்.பி.க்கள் ராஜிநாமா செய்ய தயாராக இருக்கிறோம் என்பதை அவர்களிடம் தெரிவித்திருக்கிறோம்.

மேலும் பாஜகவின் சார்பில் பேசிய மத்திய அமைச்சர் நிதின்கட்கரி காவேரி மேலாண்மை வாரியம் அமைப்பது சாத்தியமில்லை என்றும், தமிழகத்தை சேர்ந்த மத்திய அமைச்சர் சாத்தியம் உள்ளது என்றும் மாறி, மாறி கருத்து தெரிவித்து உள்ளார்களே? என்ற கேள்விக்கு காவேரி மேலாண்மை வாரியம் அமைக்கும் சாத்தியக்கூறு இல்லை என்று சொல்லும் மத்திய அமைச்சர் நிதின் கட்கரியை சந்திக்குமாறு பிரதமர் சொல்வதில் என்ன பயன் இருக்கப்போகிறது. எனவே, தமிழக விவசாயிகளை மட்டுமல்ல, ஒட்டுமொத்த தமிழக மக்களையும் ஏமாற்றுகின்ற சூழ்ச்சியில் இன்றைக்கு மத்திய அரசு ஈடுபட்டு இருக்கிறது. எனவே, அனைத்து கட்சிகளின் தலைவர்களை பிரதமர் சந்திக்க மறுப்பது, தமிழகத்திற்கு ஏற்பட்டுள்ள அவமானம் என்று தெரிவித்துக் கொள்கிறேன். சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றிய பிறகும் ஒருவேளை பிரதமர் சந்திக்க மறுத்தால் மேதகு ஜனாதிபதி அவர்களை சந்திக்கும் வாய்ப்பு இருக்கிறதா? என்றதற்கு அதை நாங்கள் மட்டும் முடிவு செய்ய முடியாது. அரசு அதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். காவேரி பிரச்னையில் அனைத்து கட்சிகளும் ஒற்றுமையாக செயல்படுவதை ஆரோக்கியமான அரசியலாக கருதுகிறீர்களா? என்ற கேள்விகு பதலளிக்கையில் இது ஆரோக்கியமா, இல்லையா என்றெல்லாம் நாங்கள் பார்க்கவில்லை. எங்களைப் பொறுத்தவரையில், காவேரி பிரச்னையை தீர்க்க வேண்டும் என்பதற்காக எந்தளவுக்கும் இறங்கி வருவதற்கு தயாராக இருக்கிறோம். அதனடிப்படையில், இன்றைக்கு முதல்வர் அழைத்தபோது கூட, உடனே வந்து எங்களுடைய கருத்துகளை பதிவு செய்திருக்கிறோம்.

காவேரி விவகாரத்தில் பிரதமர் தயக்கம் காட்டுவதற்கு, கர்நாடக மாநில தேர்தல் ஆதாயம் தான் காரணமா? என்றதற்கு நீங்கள் மட்டுமல்ல நாங்களும் அப்படித்தான் கருதுகிறோம். மத்திய அரசு இதே நிலைப்பாட்டை பின்பற்றினால் அனைத்து கட்சிகளும் ஒருங்கிணைந்து போராட்டம் நடத்தப்படுமா? என்ற கேள்விக்கு கர்நாடக மாநிலத்தில் அநியாயத்திற்கே எல்லோரும் ஒன்று கூடுகிறார்கள். ஆனால், இங்கு நமது நியாயத்தை நிலை நாட்ட எல்லோரும் ஒன்றுகூட வேண்டும் என்பதுதான் எங்களுடைய நோக்கம். அது நிறைவேறும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது என தெரிவித்தார்.
_*🎊TWEETS UPDATE🎊*_

*☀முதலமைச்சர் மீது ரூ.1500 கோடி ஊழல் புகார்*

*☀மதுரை மாவட்டம் பேரையூரில் அரசு சார்பில் நடைபெறும் வளைகாப்பு விழாவுக்காக 5 மணி நேரமாக காத்திருக்கும் கர்ப்பிணி பெண்கள்*

*☀ரஜினியின் 'காலா' டீசர் சமூக வலைத்தளங்களை வியாபித்துள்ளது. வெளியான 24 மணி நேரத்தில் ஒரு கோடி பேர் பார்த்து ரசித்துள்ளார்*

*☀வேலூர் : திருப்பத்தூர் அருகே கிளினிக் வைத்து நடத்திய சம்பத் என்ற போலி டாக்டர் கைது.*

*☀#காஞ்சிபுரத்தில் பள்ளி கழிவுநீர் தொட்டியில் தவறி விழுந்து உயரிழந்த சிறுவன் குடுபத்துக்கு ரூ.1 லட்சம் நிதி- முதல்வர் பழனிசாமி அறிவிப்பு*

*☀ஈரோடு: பவானி அருகே ரூ.2.23 கோடி மதிப்பிலான கிராமப்புற சாலை மேம்பாட்டு பணி & குடிநீர் திட்ட பணிகளை தொடங்கிவைத்தார் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கருப்பணன்*

*☀கடும் உறைபனியில் சிக்கி ஐரோப்பிய நாடுகள் தவிப்பு...*

*☀பனிப்பொழிவால் 60 பேர் உயிரிழப்பு...*

*☀ஆசிய மல்யுத்த போட்டி: தங்கம் வென்றார் நவ்ஜோத் கவுர்*

*┈┉┅━❀☀ROYAL☀❀━┅┉┈​*
*🔵⚪ இராமநாதபுரம் மாவட்டம்: முதுகுளத்தூர் அருகே  திருவரங்கத்தில் மணல் திருட்டில் ஈடுபட்ட நாகசுந்தரம், சுரேஷ் கண்ணன் ஆகிய இரண்டு பேர் கைது.*


*மணல் திருட பயன்படுத்திய ஒரு ஜேசிபி இயந்திரம் மற்றும் ஒரு டிப்பர் லாரி பறிமுதல்.*


*​​🔵⚪கரூர் மாவட்டம்:குளித்தலை அடுத்த நாகனூர் கிராமத்தில் ரேசன் கடை விற்பனையாளர் முறைகேடு என பொதுமக்கள் சாலை மறியல்.*
*🔵3 மாநில தேர்தல் முடிவுகள்: வெற்றி நிலவரம்..!*

நாகாலாந்து(28/60) என்பிஎஃப்- 14, பாஜக- 7, மற்றவை- 7
திரிபுரா(40/59) பாஜக- 23, மார்க்சிஸ்ட்- 10, மற்றவை -7
மேகாலயா (47/59) காங்கிரஸ்- 17, என்பிபி- 14, மற்றவை- 16
*🔵வெயிலின் தாக்கம் அதிகரிக்கும்!*

*🔥கோடைகாலம் வரவுள்ள நிலையில், இப்போதே வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், கடந்த ஆண்டுகளைவிட இந்தாண்டு வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்றும், கடந்த ஆண்டுகளில் மார்ச் முதல் மே மாதம் வரையிலான அதிகபட்ச வெப்பநிலையைவிட இந்தாண்டு 0.5 செல்சியஸ் டிகிரி அதிகமாக இருக்கும் எனவும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.*
*🔵நன்றி தெரிவித்த பிரதமர் மோடி!*

*🚶🏽‍♂பாஜகவுக்கு வாக்களித்த மேகாலயா, நாகாலாந்து மற்றும் திரிபுரா ஆகிய மக்களுக்கு பிரதமர் நரேந்திரமோடி நன்றி தெரிவித்துள்ளார். மேலும், பாஜகவில் கிழக்கு கொள்கை மற்றும் சிறந்த நிர்வாகத்திற்கு மக்கள் ஆதரவு அளித்துள்ளனர் எனப் பிரதமர் மோடி கூறியுள்ளார்.*
*🔵தோல்விக்கான காரணங்கள்..!*

*🗣எங்கள் நல்லாட்சி தொடர வேண்டும் என்ற எண்ணத்தில் 45 சதவீத மக்கள் வாக்களித்துள்ளனர்.* *வாக்களித்த 45 சதவீத மக்களுக்கு எங்களது நன்றிகள்" என்று மார்க்சிஸ்ட் மத்திய குழு தெரிவித்துள்ளது. மேலும், "பணம் மற்றும் இதர வழிகளைப் பயன்படுத்தி பாஜக வெற்றி பெற்றுள்ளது. தேர்தலில் கட்சி தோல்வி அடைந்ததற்கான காரணம் ஆராயப்பட்டு வருகிறது" என்றும் குறிப்பிட்டுள்ளது.*

0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More