இன்றைய செய்திகள் 08/03/2018 Today News Tamil
•┈┈•❀🐯🇮🇳🕊❀•┈┈•
*_08.03.2018_*
*_வியாழக்கிழமை_*
*_🌴🐯🇮🇳🕊🌴இன்றைய (மார்ச்-08) விலை: பெட்ரோல் ரூ.75.07, டீசல் ரூ.66.33_*
சென்னை: பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.75.07, டீசல் விலை லிட்டருக்கு ரூ.66.33 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று (மார்ச்-08) காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.
*பெட்ரோல், டீசல் விலை விபரம்:*
எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், பெட்ரோல் விலை நேற்றைய விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் லிட்டருக்கு ரூ.75.07ஆகவும், டீசல் விலையில் 6 காசுகள் குறைந்து ரூ.66.33 காசுகளாகவும் உள்ளன.
*_🌴🐯🇮🇳🕊🌴எச். ராஜாவை கைது செய்ய வேண்டும்: அரசுக்கு சத்யராஜ் கோரிக்கை_*
சென்னை: நடிகர் சத்யராஜ் பேசியிருப்பதாவது: பெரியார் என்பது சிலை அல்ல, பெயர் அல்ல, மனிதப்பிறவி மட்டுமல்ல. உழைக்கும் மக்களுக்காகவும் பெண்களுக்காகவும் மூடநம்பிக்கைகளுக்கு எதிராகவும் போராடிய ஒரு சித்தாந்தம். அவர் எங்கள் மனங்களில் வாழ்ந்துகொண்டிருக்கிறார். பெரியார் சிலையை உடைப்போம் எனக் கூறிய எச்.ராஜா மன்னிப்பு கேட்க வேண்டும். தமிழக அரசு அவரை கைது செய்ய வேண்டும்.
🌴🐯🇮🇳🕊🌴பிளஸ் 1 பொதுத்தேர்வு 63 கைதிகள் தேர்வு எழுதினர்_*
புழல் : புழல் சிறையில் பிளஸ் 1 பொதுத்தேர்வை 63 கைதிகள் எழுதினர். தமிழகத்தில் முதன்முறையாக பிளஸ் 1 வகுப்புக்கு பொதுத்தேர்வு நேற்று தொடங்கியது. மாநில முழுவதும் பிளஸ் 1 மாணவ, மாணவர்கள் அவரவர்களுக்கு ஒதுக்கப்பட்ட மையத்தில் தேர்வு எழுதினர். தமிழக சிறைச்சாலையில் உள்ள 63 சிறைக் கைதிகள் நேற்று தேர்வு எழுதினர். அவர்கள் அனைவருக்கும் புழல் சிறையில் மையம் அமைக்கப்பட்டிருந்தது. இந்த தேர்வு சிறைத்துறை துணைத் தலைவர் முருகேசன், சிறைத்துறை கண்காணிப்பாளர் சூசை மாணிக்கம் ஆகியோர் மேற்பார்வையிட்டனர்.
🌴🐯🇮🇳🕊🌴சர்வதேச பெண்கள் தினம்: தெலுங்கானா உள்ளூர் விடுமுறை அறிவிப்பு_*
ஐதராபாத்: ஆணுக்கு நிகராக பெண்கள் பல்வேறு துறைகளில் சாதனை படைத்து வருவதை கவுரவிக்கும்விதமாக ஆண்டு தோறும் மார்ச் 8 -ம் தேதி சர்வதேச மகளிர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தெலுங்கானா மாநிலத்தில் முதல்வர் சந்திரசேகரராவ் தலைமையிலான தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி அரசு சர்வதேச பெண்கள் தினத்தையொட்டி அரசு பணியாற்றும் அனைத்து மகளிருக்கும் சம்பளத்துடன் கூடிய ஒரு நாள் சிறப்பு விடுமுறை அளித்து உத்தரவிட்டுள்ளது
*📡🆎இந்திய கடல் பகுதியில் மீன்பிடித்த ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படை அத்துமீறி*
*📡🆎தாக்குதல் நடத்திய இலங்கை கடற்படையினர் மீன்பிடி சாதனங்களையும் சேதப்படுத்தியதாக மீனவர்கள் புகார்*
கர்ப்பிணி மரணத்துக்கு காரணமான,*
*துவாக்குடி போக்குவரத்து ஆய்வாளர் காமராஜ் மீது இரு பிரிவுகளில் வழக்குப்பதிவு*
*📡🆎கொலை செய்யும் நோக்கோடு விபத்து ஏற்படுத்துதல் உள்பட 2 பிரிவுகளில் வழக்கு- திருச்சி மத்திய சிறையில் அடைப்பு*
♨BCCI புதிய ஊதிய ஒப்பந்தத்தில் 2வது நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார் டோனி♨*
▫இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ள புதிய ஊதிய ஒப்பந்தத்தில், டோனி இரண்டாவது நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.
▫இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் இந்த ஆண்டுக்கான புதிய சம்பள விகித ஒப்பந்தங்களை அறிவித்துள்ளது. இதன்படி. முதல்நிலையில் 7 கோடி ரூபாய் சம்பளம் வாங்கும் பட்டியலில் கோலி, ரோகித் ஷர்மா, ஷிகர் தவான், புவனேஷ்குமார், பும்ரா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
▫இரண்டாம் நிலையில் 5 கோடி ரூபாய் ஊதியம் வாங்கும் நிலையில் டோனி, அஷ்வின், ரவீந்திர ஜடேஜா, முரளி விஜய், புஜாரா, ரகாணே மற்றும் சாகா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
▫3ஆம் நிலையில் 3 கோடி ரூபாய் ஊதியம் வாங்கும் வீரர்கள் பட்டியலில் கே.எல். ராகுல், உமேஷ் யாதவ், குல்தீப் யாதவ், யஷ்வேந்திர ஷகல், இஷாந்த் ஷர்மா மற்றும் தினேஷ் கார்த்திக் ஆகியோர் இடம் பிடித்துள்ளனர். 4ஆம் நிலையில் ஒரு கோடி ரூபாய் ஊதியத்தில் கேதர் ஜாதவ், மனீஷ் பாண்டே, அக்சர் பட்டேல், கருண் நாயர், சுரேஷ் ரெய்னா, பார்த்தீவ் பட்டேல் ஆகியோர் இடம்
▫பெற்றுள்ளனர். பெண்களுக்கான அணியில் 50 லட்சம் ரூபாய் ஊதியத்தில் மிதாலி ராஜ், கோஸ்வாமி, ஹர்மன்பிரித் கவுர் மற்றும் ஸ்மிருதி மந்தனா ஆகியோர் இடம் பிடித்துள்ளனர். 30 லட்சம் ரூபாய் ஊதியத்தில் பூனம் யாதவ், வேதா கிருஷ்ணமூர்த்தி, ஷிகா பாண்டே ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இந்த புதிய ஒப்பந்தத்தில் யுவராஜ் சிங் இடம் பெறவில்லை. மேலும் மனைவியை கொடுமைப்படுத்தியதாக கொடுக்கப்பட்ட புகாரில் சிக்கிய முகமது ஷமி ஒப்பந்தத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்
*┈┉❀☀☀❀━┈*
: *♨நியாயவிலைக்கடையில் அதிகாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 80 அரிசி மூட்டைகள் எரிந்து நாசம்♨*
▫கரூரில் உள்ள அரசு நியாயவிலைக் கடையில் இன்று அதிகாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 80 அரிசி மூட்டைகள் எரிந்து நாசமாயின. பெரியகுளத்துப்பாளையத்தில் இயங்கி வரும் நியாவிலைக் கடையில் தீப்பிடித்ததும், பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில் வந்த தீயணைப்புத்துறையினர் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
▫அதற்குள் தீயில் கருகி 80 மூட்டை அரிசி, 8 மூட்டை சர்க்கரை, நூற்றுக்கும் மேற்பட்ட கோணிப்பைகள் தீயில் கருகின. மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் வெங்கமேடு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
*┈┉❀☀❀━┈*
*♨மகளிர் தினம் : ஜெயலலிதா நினைவிடத்தில் கவுதமி அஞ்சலி♨*
▫ஜெயலலிதா இல்லாததால் தமிழகத்தில் வெற்றிடம் ஏற்பட்டுள்ளதாகவும், அந்த வெற்றிடத்தை ரஜினி, கமலால் உடனடியாக நிரப்பிவிட முடியாது என்றும் நடிகை கவுதமி தெரிவித்துள்ளார்.
▫மகளிர் தினத்தை முன்னிட்டு, இன்று காலை ஜெயலலிதா நினைவிடத்தில் அவர் அஞ்சலி செலுத்தினார்
*┈┉❀☀☀❀━┈*
*♨கும்பகோணம் தனியார் பள்ளியில் மகளிர் தினவிழா♨*
▫மகளிர் தினத்தையொட்டி, கும்பகோணத்தில் தனியார் பள்ளியில் நடனம், பாட்டு, நாடகம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. வரலாற்றில் இடம்பெற்றுள்ள பெண் தலைவர்கள் பற்றி மாணவிகள் எடுத்துரைத்தனர். சாதனைப் பெண்களின் வேடமணிந்து 20 க்கும் மேற்பட்ட மாணவிகள் அணிவகுத்து வந்தனர்
*┈┉❀☀☀❀━┈*
*♨தமிழ் என்ற சனியனே இருக்கக்கூடாது என ஈ.வெ.ரா. கூறினார் - ஹெச்.ராஜா♨*
▫தமிழ்மொழி என்ற சனியனே இருக்கக்கூடாது என ஈ.வெ.ரா. பேசியதற்கான ஆதாரம் தன்னிடம் உள்ளதாக பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா கூறியுள்ளார்.
▫திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், எல்லா விதத்திலும் தமிழ்மொழி என்ற பெயரே இருக்கக் கூடாது என்பதற்காக தமிழ் மக்கள் மீது திணிக்கப்பட்ட சொல்லே திராவிடம் என்றும், தனது கருத்துக்கள் மக்களிடம் தாக்கத்தை ஏற்படுத்துவதால் தன்னை சிலர் வசைபாடுவதாகக் கூறினார்
*┈┉❀☀☀❀━┈*
*♨பெரியார் சிலையை உடைக்க வேண்டும் என்று கூறுவது காட்டு மிராண்டித்தனம்♨*
▫பெரியார் சிலையை உடைக்க வேண்டும் என்று கூறுவது காட்டு மிராண்டித்தனம்...
▫பெரியார் சிலையை உடைத்தவர்களுக்கும் நடிகர் ரஜினிகாந்த் கண்டனம்
*┈┉❀☀❀━┈*
♨நடுக்கடலில் தமிழக மீனவர்கள் விரட்டியடிப்பு - இலங்கை கடற்படை அட்டூழியம்♨*
▫நடுக்கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்த தமிழக மீனவர்களின் வலைகளை அறுத்து இலங்கை கடற்படை விரட்டியடித்துள்ளது.
▫ராமேஸ்வரத்தில் இருந்து நேற்று மீன்வளத்துறை அலுவலகத்தில் 498 டோக்கன்களை பெற்று மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குச் சென்றனர். இந்நிலையில் 10-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் நெடுந்தீவு அருகே 50க்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடித்துக்கொண்டிருந்தனர்.
▫அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி வலைகளை அறுத்து மீனவர்களை விரட்டியடித்தனர். மீனவர்கள் இரட்டை மடி வலை பயன்படுத்துவதே பிரச்சினைக்கு காரணம் என்று மீனவர் சங்கத் தலைவர் போஸ் தெரிவித்தார்
*┈┉❀☀☀❀━┈*
*♨மகளிர் தினத்தை முன்னிட்டு, மோடி மறைந்த சமூக ஆர்வலர் குன்வர் பாயிடம் ஆசி பெற்றதை நினைவு கூர்ந்து டிவிட்டரில் பதிவு♨*
▫மகளிர் தினமான இன்று, சத்தீஷ்கரைச் சேர்ந்த மறைந்த சமூக ஆர்வலர் குன்வர் பாயை ((kunwar bai)) பிரதமர் நரேந்திர மோடி தமது டிவிட்டர் பக்கத்தில் நினைவு கூர்ந்துள்ளார்.
▫சத்தீஷ்கரில் நடந்த பொதுக் கூட்டத்தின் போது குன்வர் பாயை மேடைக்கு அழைத்து கவுரவித்த பிரதமர் மோடி, அவரது காலில் விழுந்து வணங்கினார். தற்போது இந்தக் காட்சிகளை டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள மோடி, குன்வர் பாயிடம் ஆசி பெற்றதி எண்ணி பூரிப்படைவதாக தெரிவித்துள்ளார்.
▫குன்வர் பாய் காலமாகி விட்டாலும் அவர் எப்போதும் நமது மனதில் வாழ்வார் என்றும் பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார். 106 வயதான குன்வர் பாய், வீட்டில் கழிவறைகள் கட்டுவதற்காக தாம் வளர்த்த ஆடுகளை விற்றதால், மோடியால் கவுரவிக்கப்பட்டவர்.
*┈┉❀☀❀━┈*
0 comments:
Post a Comment