இன்றைய செய்திகள் 07/03/2018 Today News Tamil
🌻உத்தர பிரதேச மாநிலம் மீரட்டில் அடையாளம் தெரியாத நபர்களால் அம்பேத்கர் சிலை உடைப்பு*
*மீரட்டில் உடைக்கப்பட்ட அம்பேத்கர் சிலைக்கு பதில் புதிய சிலை வைக்கப்பட்டதாக மீரட் காவல்துறையினர் தகவல்த
🌹மிழகத்தில் சட்டம், ஒழுங்கு, அமைதியை பாதுகாக்க வேண்டும் - தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.
* தமிழகத்தில் சிலைகளை பாதுகாக்க வேண்டும் - தலைமை நீதிபதி கருத்து.
🌹எச். ராஜா விவகாரம்- தமிழக அரசுக்கு ஹைகோர்ட் உத்தரவு
சிலைகளை பாதுகாக்க உரிய நடவடிக்கை தேவை- ஹைகோர்ட்
எச். ராஜா பேச்சால் அசாதாரண சூழல்- வக்கீல் சூரியபிரகாசம்
தமிழகம் முழுவதும் போலீசார் தீவிர கண்காணிப்பு- அரசு வழக்கறிஞர்
[07/03, 3:30 pm] +91 80980 58901: தமிழகத்தில் உள்ள ஏர்செல் நிறுவனங்களுக்கு பாதுகாப்பு வழங்க அனைத்து காவல் நிலையங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
* ஏர்செல் நிறுவனங்களுக்கு பாதுகாப்பு வழங்கக்கோரிய வழக்கில், சென்னை உயர்நீதிமன்றத்தில் காவல்துறை பதில்.
🌻*Indian cricketer MohammadShami denies torturing wife, having extramarital affairs*
🌺*Karnataka Lokayukta Justice Vishwanatha Shetty is out of danger, says Karnataka Home Minister Ramalinga Reddy to reporters*
🌻மார்ச் 26ம் தேதி புதுச்சேரி சட்டப்பேரவையை கூட்ட துணைநிலை ஆளுநர் கிரண்பேடி ஒப்புதல்; 3 நாட்கள் சட்டப்பேரவை கூட்டம் நடக்க உள்ளதாக தகவல்
அன்றைய தினமே முதல்வர் நாராயணசாமி இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார்
*🌻 *தலைமை செயலகத்தில் முதலமைச்சர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் சிறந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவிப்பு என தகவல்.*
காஞ்சிபுரம் ஆட்சியர் பொன்னையா
விழுப்புரம் ஆட்சியர் சுப்பிரமணியன்
சேலம் மாவட்ட ஆட்சியர் ரோகினி
சிறந்த காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் ( சென்னை )
🌹 ஸ்கேனர் கருவியிலும் சிக்காமல் சட்டசபைக்குள் வெடிகுண்டுடன் வந்துள்ளார் எம்எல்ஏ
வெடிகுண்டை சட்டசபைக்குள் எடுத்து வந்த காங்கிரஸ் எம்எல்ஏவுக்கு கண்டனம்
🍀கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரி ரவுண்டானா அருகில் பாஜக வின் கொடியை மர்ம நபர்கள் சிலர் அரைக் கம்பத்தில் பறக்க விட்டதால் பரபரப்பு.
இதனால் ஆத்திரம் அடைந்த பாஜகவினர் அண்ணா சிலை அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர். போலீசார் சாலை மறியலில் ஈடுபட்டவர்களை பேச்சு வார்த்தை நடத்தி கலைத்தனர்.
🔵⚪இன்றைய 50 செய்திகள் :
*🔵⚪*தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு நிலைமையை காக்க நடவடிக்கை கோரி உயர்நீதிமன்றத்தில் மனு
சென்னை: தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு நிலைமையை காக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிடக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் சூர்யபிரகாஷ் மனுதாக்கல் செய்துள்ளார். தமிழ்நாட்டில் பல இடங்களில் பெரியார் சிலை உடைக்கப்பட்டிருப்பதாக பதற்றம் நிலவுவதாக அவர் கூறியுள்ளார். சட்டம் ஒழுங்கை பேணி காக்க காவல்துறைக்கு உத்தரவிடக்கோரி வழக்கறிஞர் முறையிட்டுள்ளார். மேலும், அவசர வழக்காக விசாரிக்குமாறும் நீதிபதியிடம் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
*🔵⚪*இருளை நீக்கும் ஒளிவிளக்காக பெண்கள் உயர்ந்திட வேண்டும் : மகளிர் தினத்தையொட்டி முதல்வர் பழனிசாமி வாழ்த்து
சென்னை: மகளிர் தினத்தையொட்டி முதலமைச்சர் பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். இருளை நீக்கும் ஒளிவிளக்காக பெண்கள் உலகில் உயர்ந்து விளங்கிட வேண்டும் என்று அவர் கூறியுள்ளார். மேலும் வாழ்வில் எதிர்வரும் இடர்களை அஞ்சாமல் பெண்கள் உறுதியுடன் எதிர்கொள்ள வேண்டும் என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
*🔵⚪*மார்ச் 15ம் தேதி தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்: சட்டப்பேரவை செயலர் அறிவிப்பு
சென்னை: மார்ச் 15ம் தேதி தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என சட்டப்பேரவை செயலர் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டுள்ளார். துணை முதல்வரும் நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.
*🔵⚪*சிலை உடைப்பில் தமக்கு நம்பிக்கை இல்லை: ஹெச்.ராஜா டெல்லியில் பேட்டி
டெல்லி: சிலை உடைப்பில் தமக்கு நம்பிக்கை இல்லை என பாஜக தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா கூறியுள்ளார். டெல்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், முகநூலில் பதிவிட்ட கருத்தை தாம் ஏற்றுக்கொள்ளவில்லை என்றும், அந்த பதிவு தமக்கு தெரியாமல் வெளியானது என்றும் அவர் கூறியுள்ளார். முகநூலை நிர்வகிப்பவர் தமக்கு தெரியாமல் பதிவிட்டுள்ளதாகவும், அந்த நிர்வாகியை மாற்றிவிட்டதாகவும் ஹெச்.ராஜா கூறியுள்ளார்.
*🔵⚪*ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்களை தகுதிநீக்கம் செய்யக்கோரிய வழக்கு ஒத்திவைப்பு
சென்னை: பேரவையில் முதல்வர் பழனிசாமிக்கு எதிராக வாக்களித்த ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்களை தகுதிநீக்கம் செய்யக்கோரிய வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. திமுக கொறடா சக்கரபாணி, வெற்றிவேல் உள்ளிட்ட 4 பேர் தொடர்ந்த வழக்கில் எழுத்துபூர்வமான வாதங்களை ஏற்றுக்கொண்ட உயர்நீதிமன்றம் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்துள்ளது.
*🔵⚪*ஹெச்.ராஜாவை கண்டித்து பாஜக அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற ம.க.இ.க.வினர் கைது
சென்னை: ஹெச்.ராஜாவை கண்டித்து செ்னையில் போராட்டம் நடத்தி ம.க.இ.க.வினர் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னையில் பாரதிய ஜனதா கட்சி அலுவலகத்தை முற்றுகையிடுவதற்காக அலுவலகத்தை நோக்கி பேரணி சென்றவர்களை போலீசார் வலுக்கட்டாயமாக கைது செய்து வருகின்றனர். போலீஸ் தடுத்து வருவதால் சாலையில் படுத்து ம.க.இ.க.வினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
*🔵⚪*கோவையில் பாஜக அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட விவகாரம்: ஒருவர் சரண்
கோவை: சித்தாபுதூரில் பாஜக அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட விவகாரத்தில் பாலன் என்பவர் சரணடைந்துள்ளார். பெரியார் திராவிடர் கழகத்தின் நிர்வாகி பாலன், காவல்நிலையத்தில் சரணடைந்துள்ளார்.
*🔵⚪*தொடர் அமளி காரணமாக நாடாளுமன்றம் ஒத்திவைப்பு..
டெல்லி: எதிர்க்கட்சிகளின் தொடர் அமளி காரணமாக நாடாளுமன்றம் நாளை வரை ஒத்திவைப்பட்டுள்ளது. பகல் 1 மணிக்கு அனைத்துக்கட்சி பிரதிநிதிகள் கூட்டத்துக்கு மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் அழைப்பு விடுத்துள்ளார்.
*🔵⚪*பைனான்சியர் போத்ராவின் மகள் ஆந்திராவிலிருந்து மீட்பு
சென்னை: மாயமான பைனான்சியர் போத்ராவின் மகள் கரிஷ்மாவை காவல்துறையினர் மீட்டுள்ளனர். ஆந்திர மாநிலம் குண்டூரில் உள்ள பள்ளியில் இருந்து கரிஷ்மாவை காவல்துறையினர் மீட்டுள்ளனர். இதனையடுத்து கரிஷ்மாவை காவல்துறையினர் சென்னை அழைத்து வந்துள்ளனர்.
*🔵⚪*சசிகலாவுக்கு சிறையில் சலுகைகள் வழங்குமாறு நான் எந்த அறிவுறுத்தலும் வழங்கவில்லை: சித்தராமையா மறுப்பு
பெங்களூரு: சசிகலாவுக்கு சிறையில் சலுகைகள் வழங்குமாறு, முன்னாள் டிஜிபி சத்தியநாராயணாவுக்கு நான் எந்த அறிவுறுத்தலும் வழங்கவில்லை என கர்நாடகா முதல்வர் சித்தராமையா மறுப்பு தெரிவித்துள்ளார். கர்நாடக உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் சத்தியநாராயணா பொய்யான தகவல்களை தெரிவித்துள்ளார் என அவர் கூறியுள்ளார்.
*🔵⚪*சிலை உடைப்பு சம்பவம் குறித்து பிரமரின் கருத்து பாசாங்கு வேலை : சீதாராம் யெச்சூரி
புதுடெல்லி: சிலை உடைப்பு சம்பவம் குறித்து பிரமரின் கருத்து பாசாங்கு வேலையாக உள்ளது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி கூறியுள்ளார். சிலை உடைப்புக்கு ஆளுநர் நியாயம் கற்பிக்கும் நிலையில் பிரதமரின் கருத்து பாசாங்கு வேலை என்று அவர் தெரிவித்துள்ளார்.
*🔵⚪*தன்மானத் தமிழ் இனத்தின் தனிப்பெருந்தலைவர் தந்தை பெரியாரின் புகழை போற்றிக் காப்போம்: மு.க.ஸ்டாலின்
சென்னை: தன்மானத் தமிழ் இனத்தின் தனிப்பெருந்தலைவர் தந்தை பெரியாரின் புகழை போற்றிக் காப்போம் என மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். திமுக தொண்டர்களுக்கு ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில், பெரியார் விதைத்த கொள்கைகள் இன்று ஆலமரமாய் வளர்ந்து குடையாக-நிழலாக-ஊன்றுகோலாய் பாதுகாப்பு தருகிறது என கூறியுள்ளார். பெரியாரின் புகழ் காக்கும் பணியில் ஆர்ப்பாட்டம் நடத்த களமிறங்கியிருக்கும் திமுக தொண்டர்களுக்கு ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
*🔵⚪*சென்னையிலிருந்து சிங்கப்பூர் கடத்த முயன்ற 13 டன் செம்மரக்கட்டைகள் பறிமுதல்
சென்னை: சென்னையிலிருந்து சிங்கப்பூர் கடத்த முயன்ற 13 டன் செம்மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ரூ.5 கோடி மதிப்புள்ள செம்மரக்கட்டைகள் துறைமுகத்தில் லாரியுடன் அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். செம்மரம் கடத்த முயன்ற ஒருவரை கைது செய்த சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
*🔵⚪*எதிர்க்கட்சிகள் தொடர் முழக்கத்தால் மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைப்பு
புதுடெல்லி: எதிர்க்கட்சிகள் தொடர் முழக்கத்தால் மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைப்பட்டுள்ளது. பெரியார் சிலை உடைப்பு, காவிரி மேலாண்மை வாரியம், ஆந்திரா சிறப்பு அந்தஸ்து விவகாரத்தால் அவை முடங்கியது. இதையடுத்து மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
*🔵⚪*பெரியார் சிலை முன்பு விழுந்து ஹெச்.ராஜா மன்னிப்பு கேட்க வேண்டும்: மாணவர் அமைப்பினர் பேட்டி
சென்னை: பா.ஜ.க தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா மீது காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. பெரியார் சிலை முன்பு விழுந்து ஹெச்.ராஜா மன்னிப்பு கேட்க வேண்டும் என மாணவர் அமைப்பினர் கூறியுள்ளனர். சமூக அமைப்புக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்படும் ஹெச்.ராஜாவுக்கு மனநலம் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர்கள் கூறியுள்ளனர். மேலும், ஹெச்.ராஜாவை குண்டர் சட்டத்தில் கைது செய்ய அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
*🔵⚪*கருத்தை கருத்தால் சந்திக்காமல் வன்முறையால் சந்திப்பவர்கள் கோழைகள் : சி.பி.ராதாகிருஷ்ணன்
சென்னை: பெரியார் ஒன்றும் கடவுள் இல்லை, ஒரு மனிதர் என்று தேசிய கயிறு வாரிய தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். ஹெச்.ராஜா கூறிதான் பெரியார் சிலையை உடைத்தனர் எனில் அவர் மீது நடவடிக்கை எடுக்கலாம் என்று அவர் கூறியுள்ளார். கருத்தை கருத்தால் சந்திக்காமல் வன்முறையால் சந்திப்பவர்கள் கோழைகள் என்று சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
*🔵⚪*பெரியார் சிலை மீது கை வைத்தால் தமிழகம் துடித்து எழும்: தம்பிதுரை பேட்டி
டெல்லி: பெரியாரை இழிவுபடுத்தும் செயலை ஒருபோதும் ஏற்க முடியாது என்று மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை கூறியுள்ளார். டெல்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், பெரியார் சிலை மீது கை வைத்தால் தமிழகம் துடித்து எழும் என்றும், சிலை உடைப்பில் ஈடுபட்டவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.
*🔵⚪*திருவாரூர் அருகே ஜவுளிக்கடையில் 2வது நாளாக வருமான வரித்துறை சோதனை
திருவாரூர்: விஜயபுரத்தில் உள்ள பிரபல ஜவுளிக்கடையில் வருமான வரி சோதனை நடைபெற்று வருகிறது. வரி ஏய்ப்பு புகாரில் மகாராஜா சில்க்ஸ் என்ற ஜவுளிக்கடையில் 2வது நாளாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
*🔵⚪*ஹெச்.ராஜா மீது நடவடிக்கை எடுப்பது பற்றி கட்சி முடிவு செய்யும்: பொன்.ராதாகிருஷ்ணன்
டெல்லி: தமிழகத்தில் பெரியார் சிலை சேதப்படுத்தப்பட்டதற்கு பாஜக வருத்தம் தெரிவித்துக்கொள்வதாக மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். டெல்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், எவருடைய சிலையை அவமானப்படுத்தினாலும் பாஜக ஏற்றுக்கொள்ளாது என கூறியுள்ளார். மேலும், ஹெச்.ராஜா மீது நடவடிக்கை எடுப்பது பற்றி கட்சி முடிவு செய்யும் என அவர் கூறியுள்ளார்.
*🔵⚪*காவிரி பிரச்சனையை திசைத்திருப்பும் வகையில் ஹெச்.ராஜா பேச்சு: கமல்ஹாசன் குற்றச்சாட்டு
சென்னை: காவிரி பிரச்சனையை திசைத்திருப்பும் வகையில் ஹெச்.ராஜா பேசியுள்ளதாக மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் குற்றம்சாட்டியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், பெரியார் சிலைகளையும் கவுரவத்தையும் தமிழர்கள் பார்த்துக்கொள்வார்கள் என கூறியுள்ளார். மேலும், ஹெச்.ராஜா வருத்தம் தெரிவித்தது போதாது என கமல் கூறியுள்ளார்.
*🔵⚪*எனக்கும் தமிழகத்தில் முதல்வராக வேண்டும் என்ற ஆசை உள்ளது : திருநாவுக்கரசர்
சென்னை: காங்கிரஸ் சார்பில் எனக்கும் தமிழகத்தில் முதல்வராக வரவேண்டும் என ஆசை உள்ளது என்று திருநாவுக்கரசர் கூறியுள்ளார். முதல்வர் வேட்பாளர்கள் பலரும் தமிழகத்தில் அரசியல் களத்தில் குதித்துள்ளனர். முதல்வராகும் தகுதி எனக்கும் உள்ளது என்று திருநாவுக்கரசர் கூறியுள்ளார்.
*🔵⚪*கோவை BJP அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீசிய இருவர் கைது
கோவை: கோவை: கோவை மாவட்டம் சித்தாபுதூரில் உள்ள பாஜக அலுவலகம் மீது 2 பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டது. இன்று அதிகாலை பெட்ரோல் குண்டுவீசி, ஆட்டோவில் தப்பியோடிய மர்மநபர்களை போலீசார் வலை வீசி தேடி வந்தனர். இந்நிலையில் கோவையை சேர்ந்த பாலன், ஜீவானந்தம் ஆகியோரை போலீஸார் கைது செய்துள்ளனர்
*🔵⚪*நெல்லையில் 10-க்கும் மேற்பட்ட பீடி நிறுவனங்களில் ரெய்டு
நெல்லை: நெல்லை மாவட்டத்தில் உள்ள 10-க்கும் மேற்பட்ட பீடி நிறுவனங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். சந்திரிகா, ஜோதிமான் உள்ளிட்ட பீடி நிறுவனங்களில் அதிரடி சோதனை நடைபெற்று வருகிறது.
*🔵⚪*பூணூல் அறுப்பு விவகாரம் : ராயப்பேட்டை காவல்நிலையத்தில் 4 பேர் சரண்
சென்னை : திருவல்லிகேணியில் பூணூல் அறுப்பு சம்பவத்தில் ஈடுபட்டதாக ராயப்பேட்டை காவல்நிலையத்தில் 4 பேர் சரணடைந்துள்ளனர். சரணடைந்த ராவணன், உமாபதி, ராஜேஷ், பிரபாகர் ஆகியோர் திராவிடர் விடுதலை கழகத்தை சேர்ந்தவர்கள் என்று தெரியவந்துள்ளது.
*🔵⚪*சிலை தொடர்பான அரசியலை நிறுத்துங்கள் : நடிகர் பிரகாஷ்ராஜ்
சென்னை: தமிழகத்தில் பெரியார் சிலை அகற்றப்படும் என்ற ஹெச்.ராஜா கருத்து குறித்து டிவிட்டரில் பதிவிட்டுள்ள நடிகர் பிரகாஷ்ராஜ், சிலை தொடர்பான அரசியலை நிறுத்துங்கள், எங்கள் குழந்தைகளுக்கு எதை கற்று தருகிறீர்கள் என்று குறிப்பிட்டுள்ளார். வன்முறை வன்முறையை தான் தூண்டும். உங்கள் தேர்தல் அறிக்கை வளர்சியா அல்லது குண்டர் சட்டம் போடப்படும் வகையில் நடத்தப்படும் வன்முறையா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
*🔵⚪*கோவை பெட்ரோல் குண்டு வீச்சு வழக்கில் தேடப்பட்டு வந்த 3வது நபர் காவல்நிலையத்தில் சரண்
கோவை: கோவையில் உள்ள பாஜக அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீசியதாக தேடப்பட்டு வந்த 3வது நபரும் சரணடைந்துள்ளார். சிங்காநல்லூர் பகுதியைச் சேர்ந்த கெளதம் என்பவர், சாய்பாபா காலனி காவல்நிலையத்தில் சரணடைந்துள்ளார். தந்தை பெரியார் திராவிட கழகத்தை சேர்ந்த ஜீவானந்தம், பாலன் ஆகியோர் ஏற்கனவே கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
*🔵⚪*எதிர்க்கட்சிகள் தொடர் போராட்டத்தால் மாநிலங்களவை ஒத்திவைப்பு
டெல்லி: எதிர்க்கட்சிகள் தொடர் போராட்டத்தால் மாநிலங்களவை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் 3வது நாளாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. வங்கி மோசடி, காவிரி விவகாரம் குறித்து விவாதிக்க கோரி எதிர்க்கட்சிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.
*🔵⚪*மீரட் நகரில் மர்ம நபர்களால் அம்பேத்கர் சிலை உடைப்பு
உத்தரபிரதேசம்: மீரட்டில் அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் அம்பேத்கர் சிலை உடைக்கப்பட்டுள்ளது. மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
திரிபுராவில் லெனின் சிலை அகற்றப்பட்ட நிலையில் மீரட்டில் அம்பேத்கர் சிலை உடைக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
*🔵⚪*மீரட்டில் அம்பேத்கர் சிலை உடைக்கப்பட்டதற்கு கி.வீரமணி கண்டனம்
சென்னை: உத்தரப்பிரதேரச மாநிலம் மீரட்டில் அம்பேத்கர் சிலை உடைக்கப்பட்டதற்கு திராவிட கழகத் தலைவர் கி.வீரமணி கண்டனம் தெரிவித்துள்ளார். பாஜகவுக்கு எதிராக மக்கள் திரண்டு போராடக் கூடிய ஒரு சூழல் உருவாகியுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
*🔵⚪*ஹெச்.ராஜா மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கக் கோரி வழக்கு
சென்னை: ஹெச்.ராஜா மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கக் கோரி சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. திரிபுராவில் லெனின் சிலை அகற்றப்பட்டதை போல தமிழகத்தில் பெரியார் சிலை அகற்றப்படும் என்று ஹெச்.ராஜா கருத்து தெரிவித்திருந்தார். இதையடுத்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வழக்கறிஞர் அணியின் கார்த்தி வன்முறையை தூண்டும் வகையில் பேச்சு உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்க கோரி சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளார்.
*🔵⚪*பெங்களூருவில் லோக் ஆயுக்தா நீதிபதி விஷ்வநாத் ஷெட்டிக்கு கத்திக்குத்து
பெங்களூரு: பெங்களூருவில் லோக் ஆயுக்தா நீதிபதி பட்டப்பகலில் கத்தியால் குத்தப்பட்டுள்ளார். நீதிபதி விஷ்வநாத் ஷெட்டியை, புகார் அளிக்க வந்த சர்மா கத்தியால் குத்தியுள்ளார். கத்திக்குத்தில் பலத்த காயமடைந்த நீதிபதி விஷ்வநாத், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
*🔵⚪*சென்னையில் தற்கொலை செய்துகொண்ட எஸ்.ஐ. சதீஷ்குமார் உடல் பெற்றோரிடம் ஒப்படைப்பு
சென்னை: அயனாவரத்தில் தற்கொலை செய்துகொண்ட எஸ்.ஐயின் உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. கீழ்பாக்கம் மருத்துவமனையில் பிரேத பரிசோதனை முடிந்த பிறகு எஸ்.ஐ. சதீஷ்குமார் உடல் ஒப்படைக்கப்பட்டது.
*🔵⚪*காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது குறித்து மத்திய நீர்வளத்துறை அமைச்சகம் ஆலோசனை
புதுடெல்லி: காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக மத்திய நீர்வளத்துறை அமைச்சகம் ஆலோசனை நடத்தி வருகிறது. நிதித்துறை, உள்துறை, சுற்றுச்சூழல் துறை, வேளாண் அமைச்சக அதிகாரிகளுடன் நீர்வளத்துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
*🔵⚪*ஹெச்.ராஜாவின் மன்னிப்பை ஏற்றுக்கொள்ள முடியாது: திருச்சி சிவா பேட்டி
டெல்லி: மன்னிப்பு கேட்பதால் ஒரு குற்றம் மறையாது என மாநிலங்களவை திமுக உறுப்பினர் திருச்சி சிவா கூறியுள்ளார். டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஹெச்.ராஜாவின் மன்னிப்பை ஏற்றுக்கொள்ள முடியாது என கூறியுள்ளார். ஹெச்.ராஜா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.
*🔵⚪*பாதுகாப்பு வழங்க கோரி ஏர்செல் நிறுவனம் உயர்நீதிமன்றத்தில் மனு
சென்னை: நிறுவனம், அலுவலகங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க கோரி ஏர்செல் நிறுவனம் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. ஏர்செல் நிறுவனம் மீது மக்கள் என்ற பெயரில் சில விஷமிகள் போராட்டம் நடத்துவதாக மனுவில் புகார் அளித்துள்ளனர். மனு மீதான விசாரணை இன்று பிற்பகல் நடைபெற உள்ளது.
*🔵⚪*தமிழக மீனவர் பிரச்சனையில் அரசியலை புகுத்தாமல் தீர்வு காண வேண்டும்: இலங்கை அமைச்சர் பேட்டி
திருவள்ளூர்: தமிழக மீனவர் பிரச்சனையில் அரசியலை புகுத்தாமல் தீர்வு காண வேண்டும் என இலங்கை அமைச்சர் சுவாமிநாதன் கூறியுள்ளார். திருத்தணியில் சுவாமி தரிசனம் செய்தபின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், இலங்கையில் தமிழர்களுக்கு 90% மறு குடியேற்றப் பணிகள் முடித்து தரப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். மீதமுள்ள பணிகள் 2 ஆண்டுகளில் முடித்து தமிழர்களுக்கு வாழ்வாதாரம் ஏற்படுத்தி தரப்படும் என அவர் கூறியுள்ளார்.
*🔵⚪*தமிழகத்தில் சிலைகள் பாதுகாக்கப்பட வேண்டும்: அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
சென்னை: தமிழகத்தில் சிலைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஐகோர்ட் ஆணையிட்டுள்ளது. ஹெச்.ராஜாவின் பேச்சால் அசாதாரண சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக வக்கீல் சூரியபிரகாசம் தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
*🔵⚪*பத்திரப்பதிவுக்கு லஞ்சம் வாங்கிய வழக்கு: சார் பதிவாளருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை
நாமக்கல்: பரமத்திவேலூரில் பத்திரப்பதிவுக்கு லஞ்சம் வாங்கிய வழக்கில் சார் பதிவாளர் பாலசுப்பிரமணியனுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் ரூ 5,000 அபராதம் விதித்து நாமக்கல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2001ல் பத்திரப்பதிவுக்கு வையாபுரி என்பவரிடம் ரூ.2,000 லஞ்சம் வாங்கிய புகாரில் பாலசுப்பிரமணியன் கைது செய்யப்பட்டார்.
*🔵⚪*எழும்பூர் ரயில் டிக்கெட் முன்பதிவு மையத்தில் இயந்திரக் கோளாறு: பயணிகள் அவதி
சென்னை: சென்னை எழும்பூர் ரயில் டிக்கெட் முன்பதிவு மையத்தில் இயந்திரக் கோளாறு ஏற்பட்டுள்ளது. சர்வர் பழுதால் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியாமல் ஒரு மணி நேரமாக பயணிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
*🔵⚪*பெரியார் போன்ற தலைவர்களை அவமதிப்பு செய்வதை பாஜக ஆதரிக்காது : பாஜக மேலிடப் பொறுப்பாளர் முரளிதர் ராவ்
சென்னை : பெரியார் போன்ற பெரிய தலைவர்களை அவமதிப்பு செய்வதையும், சிலைகளை இடிப்போம் என்ற மரியாதை குறைவான கருத்துகளையும் பாஜக ஆதரிக்காது என்று பாஜக மேலிடப் பொறுப்பாளர் முரளிதர் ராவ் கருத்து தெரிவித்துள்ளார். ஹெச். ராஜாவின் செயல் கண்டிக்கத்தக்கது என கூறிய அவர், பெரியார் போன்ற தலைவர்களை இழிவுப்படுத்துவோருக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இதற்கு முன்னதாக பெரியார் சிலையை அகற்றுமாறு நான் பதிவிடவில்லை என்றும் முகநூல் அட்மின்தான் பதிவு செய்தார் என்றும் பாஜக தேசிய செயலாளர் எச். ராஜா கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
*🔵⚪*சிலை உடைப்பு, சேதப்படுத்துவோரை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்: மத்திய உள்துறை உத்தரவு
டெல்லி: சிலை உடைப்பு, சேதப்படுத்துவோரை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. கடும் நடவடிக்கை எடுக்க மாநில அரசுகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. திரிபுராவில் லெனின் சிலை உடைக்கப்பட்ட சம்பவத்தையடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
*🔵⚪*பெரியார் பற்றிய ஹெச்.ராஜாவின் கருத்தை ஏற்க முடியாது: அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி
சென்னை: பெரியார் சிலையை உடைப்போம் என்கிற ஹெச்.ராஜாவின் பேச்சை ஏற்க முடியாது என சென்னை பட்டினப்பாக்கத்தில் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். பெரியார் சிலையை உடைப்போம் என்கிற கருத்தை ஹெச்.ராஜா திரும்ப பெற்றுள்ளதாகவும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
*🔵⚪*ஜனசங்க கட்சியின் நிறுவனர் சியாமா பிரசாத் முகர்ஜி சிலை கொல்கத்தாவில் உடைப்பு
கொல்கத்தா: ஜனசங்க கட்சியின் நிறுவனர் சியாமா பிரசாத் முகர்ஜி சிலை கொல்கத்தாவில் உடைக்கப்பட்டுள்ளது. 1948ல் ஜன சங்கம் கட்சியை நிறுவியர் வங்கத்தை சேர்ந்த சியாமா பிரசாத் முகர்ஜி ஆவார். ஜன சங்கம் கட்சி தான் 1980ல் பாரதிய ஜனதா கட்சி என்று பெயர் மாறியது. ஜனசங்கம் கட்சியை நிறுவிய முகர்ஜி சிலை உடைக்கப்பட்டதால் கொல்கத்தாவில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
*🔵⚪*சென்னையின் பல்வேறு இடங்களில் எச்.ராஜாவின் உருவபொம்மை எரிப்பு
சென்னை: சென்னை பூவிருந்தவல்லியில் எச்.ராஜா உருவபொம்மையை எரித்து திமுகவினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். செங்கத்தில் எச்.ராஜா உருவபொம்மையை திராவிடர் கழகத்தினர் எரித்துள்ளனர். சென்னை ஆர்.கே.நகர், திருவொற்றியூரிலும் எச்.ராஜா உருவபொம்மை எரிக்கப்பட்டுள்ளது.
*🔵⚪*எச்.ராஜாவுக்கு பா.ஜ.க மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கண்டனம்
சென்னை: எச்.ராஜாவுக்கு பாரதிய ஜனதா மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கண்டனம் தெரிவித்துள்ளார். தலைவர்கள், சிலைகளை அவமதிக்கும் வகையிலான நடவடிக்கைகள் கண்டிக்கத்தக்கது என்று தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் கருத்து தெரிவித்துள்ளார்.
*🔵⚪*எச்.ராஜாவை கைது செய்ய கோரி நாகையில் கல்லூரி மணவர்கள் போராட்டம்
நாகை: பெரியார் குறித்த கருத்துக்காக எச்.ராஜாவை கைது செய்ய வேண்டும் என மாணவர்கள் கூறியுள்ளனர். பெரியார் சிலை உடைக்கப்பட்டதற்கு நாகையில் கல்லூரி மாணவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் கல்லூரி வாயில் முன் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.
*🔵⚪*11ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தொடங்கியது
சென்னை: முதல் முறையாக 11ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் தொடங்கியது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 8,63,668 மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர். எம்பிபிஎஸ் உள்ளிட்ட மருத்துவ படிப்புகளுக்கு நீட் தேர்வை மத்திய அரசு கட்டாயமாக்கியுள்ளது. இதையடுத்து, இந்த ஆண்டு முதல் தமிழகத்தில் பிளஸ் 1 வகுப்புக்கும் பொதுத் தேர்வு நடத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
*🔵⚪*8-வது தலைமுறை ரோல்ஸ் ராய்ஸ் பேண்டம் கார் இந்தியாவில் அறிமுகம்:
டெல்லி: 8-வது தலைமுறை ரோல்ஸ் ராய்ஸ் பேண்டம் கார் டெல்லி, மும்பை, அகமதாபாத் உள்ளிட்ட வட மாநிலங்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பதிவு, காப்பீடு, வரி அனைத்தும் சேர்ந்து 9.5 கோடி ரூபாய்க்கு மேல் விலையுள்ள இந்த கார், உலகின் மிகவும் ஆடம்பரமான காராக கருதப்படுகிறது. 4 ஆண்டு பராமரிப்பு கட்டணம், வாரன்டி, பழுதாகும் இடத்திற்கே வந்து பழுது நீக்கித்தருதல் ஆகியவையும் இந்த விலையில் அடங்கும். இந்த கார் முழுவதும் அலுமினிய சட்டகத்தின் மீது கட்டமைக்கப்பட்டுள்ளது. இந்த கார் இயங்கத் தொடங்கிய 6 நொடிகளுக்குள் மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தை எட்டக்கூடியதாகும். இதன் இருக்கைகள் உயர்தரமான தோலில் செய்யப்பட்டுள்ளன.
இரவு வானத்தை பார்ப்பது போல் தோன்றும் கூரை, பொத்தான்களை அழுத்தினாள் திறந்து மூடும் கதவுகள், இரைச்சல் இல்லாத பயண அனுபவம் ஆகிய சிறப்புக்களை கொண்ட இந்த கார், பெரும் தொழிலதிபர்களை கவரும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது. முதன்முதலாக 1925 ஆம் ஆண்டில் ரோல்ஸ் ராய்ஸின் பேண்டம் மாடல் கார் அறிமுகப்படுத்தப்பட்டது. அப்போது, உலகிலேயே மிக ஆடம்பரமான காராக இது அங்கீகரிக்கப்பட்டது. அப்போது முதல் கடந்த 92 ஆண்டுகளாக பேண்டம் காரின் 7 வடிவமைப்புகள் அடுத்தடுத்து வந்துள்ளது. அப்போது முதல் இன்று வரை உலகின் மிக ஆடம்பரமான காராக ரோல்ஸ் ராய்ஸ் பேண்டம் கார் விளங்கி வருவது குறிப்பிடத்தக்கது
0 comments:
Post a Comment