Hi manisat
#ref-menu

Saturday, March 3, 2018

இன்றைய செய்திகள் 03/03/18 Today Tamil News




இன்றைய செய்திகள் 03/03/18 Today Tamil News

பாஜகவின் தேர்தல் வெற்றிக்கு பிரபலங்கள் தேவையில்லை இளைஞர்கள் போதும்.சூரியன் மறையும்போது சிகப்பு வண்ணத்தில் இருக்கும், ஆனால் அது உதிக்கும் போது காவி நிறத்தில்தான் இருக்கும் : பிரதமர் மோடி.

மேகாலயா, திரிபுரா, நாகாலாந்து மாநில மக்களுக்கு பிரதமர் மோடி, ட்விட்டரில் நன்றி.3 மாநில மக்களின் கனவு நனவாகவும், அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யவும் பாஜக பணியாற்றும் : பிரதமர் மோடி.

ஆந்திராவில் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்ட வேலூர், திருவண்ணாமலையைச் சேர்ந்த 84 பேர் அவரவர் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடி வழக்கில் நீரவ்மோடிக்கு ஜாமினில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பித்தது மும்பை சிறப்பு நீதிமன்றம் உத்தரவு.

தேர்வு மையங்களாக செயல்படும் பள்ளிகளைச் சேர்ந்த ஆசிரியர்கள், தேர்வின்போது தங்களது பள்ளிகளுக்கு செல்லக்கூடாது - தேர்வுத்துறை.

மீறினால் பள்ளியின் அங்கீகாரம் ரத்தாகும், ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் - தேர்வுத்துறை.

திரிபுரா அமைச்சரவையில் கூட்டணி கட்சிகளுக்கும் இடம் உண்டு.பாஜகவுக்கு இந்நாள் பெருமைக்குரிய நன்னாள்.3 மாநில தேர்தல் முடிவு கர்நாடகா சட்டப்பேரவை தேர்தலில் எதிரொலிக்கும் - பாஜக தலைவர் அமித்ஷா.

மேகாலயா சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியீடு : எந்த கட்சியும் பெரும்பான்மை பெறாததால் தொங்கு சட்டமன்றம் அமைகிறது.

விழுப்புரத்தில் நடைபெற்ற தாக்குதலில் உயிரிழந்த சிறுவன் சமயன் குடும்பத்திற்கு ரூ. 2 லட்சம் நிதியுதவி வழங்க முதல்வர் பழனிசாமி உத்தரவு.

சொத்து விவரங்களை தர பல்கலைக்கழக துணைவேந்தர்களுக்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் உத்தரவு.

ஆந்திராவில் கைதாகி விடுவிக்கப்பட்ட 84 தமிழர்களும் செம்மரம் வெட்ட மீண்டும் வரமாட்டோம் என கபிலீஸ்வரர் கோயில் முன் 84 பேரும் சத்தியம் செய்தனர்.

சிரிய அரசை கண்டித்து சென்னை ரஷ்ய தூதரகம் முற்றுகை : சிரிய அரசை கண்டித்து இஸ்லாமியர்கள் போராட்டம்.

காஞ்சிபுரம் திருக்கழுகுன்றத்தில் 7 அடி உயர எம்ஜிஆர் சிலையை முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார்.

பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடி வழக்கில் நிரவ் மோடிக்கு ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பித்தது மும்பை சிறப்பு நீதிமன்றம்.

தமிழகத்தில் 5 தாய்ப்பால் வங்கிகள் அமைக்கப்பட உள்ளது.சென்னையில் ரூ 10 கோடியில் குழந்தைகள் சிறப்பு சிகிச்சை மையம், ரூ 20 கோடியில் இருதய நோய் சிறப்பு சிகிச்சை மையம் அமைக்கப்படும் - அமைச்சர் விஜயபாஸ்கர்.

காவிரி பிரச்சனையில் அடுத்த கட்ட நடவடிக்கை மாண்புமிகு தமிழக முதலமைச்சர் உடன் திமுக செயல்தலைவர் முக.ஸ்டாலின் ஆலோசனை.

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது குறித்து சிறப்பு சட்டமன்றத்தைக் கூட்டி மத்திய அரசுக்கு அழுத்தம் தர தீர்மானம் நிறைவேற்ற வேண்டுமென வலியுறுத்தினேன் - திமுக செயல் தலைவர் முக.ஸ்டாலின்.

வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காகவே முதல்வர் பினராய் விஜயன் அனுமதி – அப்பலோ மருத்துவமனை விளக்கம்.

சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகையில் கேரள முதல்வர் பினராயி விஜயனை சந்தித்து நலம் விசாரித்தார் கமல்ஹாசன்.

ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்திற்கு எதிராக குமரெட்டியார்புரம் மக்களோடு மே 17 இயக்கத்தின் திருமுருகன் காந்தி சந்திப்பு.

அண்ணா அறிவாலயத்தில் திமுக நிர்வாகிகளிடையே அடிதடி - பதற்றம்: செய்தி - அண்ணா கற்றுக் கொடுத்த கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டை செயல்படுத்திக் காட்டியிருக்கிறார்கள் - பாமக நிறுவனர் ராமதாஸ்.

நிர்வாகிகள் மீது புகார் வந்தால் நானே நேரடியாக தலையிட்டு நடவடிக்கை எடுப்பேன்.தமிழகத்தின் பிரச்சனைகள் குறித்து முதல்வர் என்னை அழைத்து பேசுகிறார். ஆட்சி அவர்களுடையது என்றாலும் நடத்துவது நாம்தான் - முக.ஸ்டாலின்.

காவிரி விவகாரத்தில் எம்பிக்கள் பதவி விலகி அழுத்தம் தர வேண்டும் - பாமக நிறுவனர் ராமதாஸ்.

சென்னை விமான நிலையத்தில் 78வது முறையாக உள்நாட்டு விமான நிலையத்தின் புறப்பாடு பகுதியில் கண்ணாடி உடைந்து விபத்து.

பிரதமர் மோடியின் அறிவுறுத்தலின்படி புதுச்சேரியில் உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும் : ஆளுநர் கிரண்பேடி.

திரிபுரா பேரவைத் தேர்தலில் மார்க்சிஸ்ட் கட்சியை ஆதரித்த மக்களுக்கு நன்றி.பணம் மற்றும் இதர வழிகளை பயன்படுத்தி பாஜக வெற்றி பெற்றுள்ளது.தேர்தலில் கட்சி தோல்வி அடைந்ததற்கான காரணம் ஆராயப்பட்டு வருகிறது - மார்க்சிஸ்ட் மத்திய குழு.

விழுப்புரம் அருகே மரகதபுரம் தென்பெண்ணை ஆற்றில் மணல் கடத்தலில் ஈடுப்பட்ட ரமேஷ், இளையராஜா ஆகிய இருவர் கைது.

புதுச்சேரி மாநிலத்தில் மஞ்சள்நிற ரேஷன் அட்டைக்கு 10 கிலோ அரிசியும், சிவப்புநிற ரேஷன் அட்டைக்கு 20 கிலோ இலவச அரிசி வழங்கப்படும் : முதல்வர் நாரயாணசாமி.

காஞ்சிபுரம் : ஆலந்தூர் அருகே தனியார் பள்ளி கழிவுநீர் தொட்டியில் மூழ்கி உயிரிழந்த எல்.கே.ஜி மாணவன் குடும்பத்திற்கு ரூ.1 லட்சம் நிதி - முதலமைச்சர் அறிவிப்பு.

சேலம் கன்னங்குறிச்சி காவல் நிலைய தலைமை காவலர் ஏழுமலை சஸ்பெண்ட் : ரவுடிகளுக்கு ஆதரவாக செயல்பட்ட புகாரில் சஸ்பெண்ட் செய்து சேலம் காவல் ஆணையர் உத்தரவு.

ஆத்தூரில் தடை இல்லா சான்றிதழ் அளிக்க விவசாயியிடம் ரூ.10,000 லஞ்சம் வாங்கிய எஸ்பிஐ உதவி மேலாளர் கைது.

போக்குவரத்து மேம்பாடு, மக்கள் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பை மையமாக வைத்து சைக்கிள் திட்டம்.பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைக்க மட்கும் பைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன - அமைச்சர் வேலுமணி.

சுல்தான் அஸ்லான் ஷா ஹாக்கி = அர்ஜெண்டினா அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் 3-2 என்ற கோல் கணக்கில் இந்திய அணி தோல்வி.

போக்குவரத்து ஊழியர்கள் ஊதிய உயர்வு தொடர்பான, மத்தியஸ்தர் பத்மநாபன் தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தை நிறைவுபெற்றது.

சென்னையில் திரைப்பட பைனான்சியர் போத்ராவின் மகள் கரிஷ்மா போத்ரா மாயம் : கரிஷ்மா கடத்தப்பட்டதாக தி.நகர் துணை ஆணையரிடம் போத்ரா புகார்.

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் செல்போன் எடுத்துச் செல்ல விதித்த தடை இன்று முதல் அமலுக்கு வந்தது. மேற்கு மற்றும் வடக்கு கோபுர வாசல் அருகே செல்போன் பாதுகாப்பு மையம் திறக்கப்பட்டுள்ளது.

மதுரையில் என்கவுன்டர் நடந்த வீட்டின் உரிமையாளர் மாயக்கண்ணன் விருதுநகர் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் சரணடைந்தார்.

0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More